Home » Indian News » இந்தியாவின் குடியரசுத் தின விழா டில்லியில் பிரணாப் முகர்ஜி கொடியேற்றினார்!

இந்தியாவின் குடியரசுத் தின விழா டில்லியில் பிரணாப் முகர்ஜி கொடியேற்றினார்!

Republic Day-Paradeஇந்தியாவின் 66-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டில்ல்லியில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

தடில்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக முப்படைகளைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவலர் படைகளின் அணிவகுப்பும் இடம்பெற உள்ளது

குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ள தில்லியில் காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியரசு தின விழா அணிவகுப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொள்கிறார். முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் டில்லி முழுவதும் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையிலான ராணுவ அணிவகுப்பும்வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும் பல்வேறு மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இதில் பங்கேற்க உள்ளன. அதோடு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிட்செல் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பிரணாப் முகர்ஜி கொடியேற்றியதை அடுத்து அசோகசக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus