Home » Asia News » Srilanka News » இலங்கையின் தலவாக்கலையில் மக்கள் போராட்டம் காவல்துறையினர் மீதும் தாக்குதல்!

இலங்கையின் தலவாக்கலையில் மக்கள் போராட்டம் காவல்துறையினர் மீதும் தாக்குதல்!

2011262037unnamedஇலங்கையின் தலவாக்கலை பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் நேற்று மாலை 3 மணியளவில் இளைஞர் ஒருவர் 40 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து காணாமல் போன சம்பவத்தில் பொலிஸாரை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ரயில் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் திரும்பி நானுஊயா வரை சென்றதாகவும் தற்போது காவல்துறையினரால் நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus