இலங்கையின் தலாவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
20 வயதுடைய மனோஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இளைஞன் நேற்று மாலை 3 மணியளவில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 40 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து காணாமல் போயிருந்தார்.
இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் நேற்றும் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.