Home » Asia News » Srilanka News » இலங்கை பிரதமா் ரணிலுக்கும் பாக்கிஸ்தான் உயா் அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை பிரதமா் ரணிலுக்கும் பாக்கிஸ்தான் உயா் அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு!

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேசிக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவுக் கொள்கைகள் மற்றும் உறவினை மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன் தற்போது அண்மையில் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசாங்கத்தின் கீழ் அண்மையில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கு வந்து மிகக்குறுகிய கால இடைவௌிக்குள் மிகவும் திறமையாக செயற்பட்டு பாகிஸ்தானுடனான நட்புறவு தொடர்ந்தும் புதிய அரசாங்கத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என கருத்து தெரிவித்ததை முன்னிட்டு பிரதமருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மையில் பெஷாவர் பள்ளி தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாகிஸ்தான் தூதரகத்துக்கு வருகை தந்தமையை முன்னிட்டு தனிப்பட்ட ரீதியில் பிரதமருக்கு மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நல்லிணக்கம் எமது புதிய அரசாங்கத்தின் கீழ் இன்னும் பலப்படுத்தப்படும் என தெரிவித்ததுடன் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யகூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus