தைப்பொங்கல்
தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் கூற்று இவ்வளவு காலமும் எம் தமிழர்களுக்கு வழி பிறக்கவில்லையே!
மேலும் மேலும் வலிகளையே சுமக்கின்றார்கள் ஈழ மறவர்கள் ஓர் கையில் ஆயுதமும், மற்றோர் கையில் (சூரியனே) உனக்காக பொங்கலும் செய்தார்களே! வலி தாங்கிய இதயங்களோடு நீ தோன்றிய ஆண்டின் வடிவிலே மண் பானைகள் வைத்து பொங்கி படைத்தார்களே! நன்றாக சுவைத்தாயா?
இப்பொது அவர்கள் எங்கே? நாம் அனைவரும் ஒன்று கூடி உனக்கு நன்றி செலுத்த தவறுவதில்லையே! இனி வரப்போகும் இனிய தைத்திருநாள் பொங்கலே! தாமரை மலர்கள் மலர்வது போல எல்லாத் தமிழ் நெஞ்சங்களிலும் நிறைந்து இருக்க நம் தமிழ் மக்களுக்கு நல்வழிக்காட்டி வாழ்வில் மேன்மை பெற ஒவ்வொரு உழவர்களும் உனை வாழ்த்தும் படியாய் மலர்ந்திடுவாய் தைத்திருநாளே.
பொங்கலோ பொங்கல்