இங்கிலாந்து நாட்டில் லண்டன் அருகே உள்ள பிராட்போர்டில் வசித்து வருபவர் கரம்சந்த். இந்தியரான இவருக்கு வயது 109. இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவரது மனைவிக்கு வயது 102. இவர்கள் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்பதால், தங்களது பிறந்த நாளை 4 தலைமுறையினருடன் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இவர்கள் இளம்வயதில் இந்தியாவில் இருந்தபோது 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்து 89 வருடங்கள் ஆகிறது. இவர்களது திருமணம் நடந்த ஆண்டில் தான் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் பிறந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
109 வயதானாலும் கரம்சந்த் இன்னும் தனது வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார். தினமும் மாலை உணவுக்கு முன்னர் ஒரு சிகரெட் புகைக்கிறார். வாரத்தில் 3 அல்லது 4 முறை சிறிதளவு விஸ்கி அல்லது பிராந்தி குடிக்கிறார். இவர்கள் தான் உலகிலேயே வயதான தம்பதிகளாக கருதப்படுகிறார்கள்.