ஐபால் நிறுவனம் அதன் புதிய அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை, மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டூயல் சிம் கொண்ட ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 289ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD OGS டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் பின்புற பேனலில் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ரேம் 2ஜிபி மற்றும் 1.4GHz அக்டா கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பின்புற கேமராவில் சீன் டிடெக்ஷன், ஃபேஸ் ரெகக்னைசேஷன், பனோரமா, ஜியோ டேகிங், ஸ்மைல் ஷாட், ஃபேஸ் பியூட்டி, பனோரமா மோட், மற்றும் ஸ்மைல் ஷாட் விருப்பங்கள் கொண்டுள்ளது.
ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 a/b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, FM ரேடியோ மற்றும் ப்ளூடூத் ஆகியவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2250mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் ஆம்பிஎண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் மேக்னடிக் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
ஐபால் அன்டி 5Q கோபால்ட் சொலஸ் ஸ்மார்ட்போன்:
டூயல் சிம்,
720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD OGS டிஸ்ப்ளே,
ரேம் 2ஜிபி,
1.4GHz அக்டா கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,
மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா,
5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
3ஜி,
ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
Wi-Fi 802.11 a/b/g/n,
மைக்ரோ-யுஎஸ்பி,
ப்ளூடூத்,
FM ரேடியோ,
ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
2250mAh பேட்டரி.