Home » Education News » மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

28538

முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற ஏப்.,30க்குள் கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும், என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

15 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் சமூக தொண்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அங்கீகாரம் அளித்தல் ஆகியவற்றிக்காக ஆண்டுதோறும் ஆக.,15 சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படுகிறது. மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஆறு நபர்களுக்கு முதல்வரின் மாநில இளைஞர் விருது, பதக்கம், பாராட்டுச்சான்று, 50,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்.

தகுதிகள்:

தமிழகத்தில் சமூக நலனுக்காக தொண்டு புரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னர் ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் சேவை தன்னார்வம் உடையதாகவும், சமுதாயம்,சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கியதாகவும் இருக்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைகள், கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிவோர் விண்ணப்பிக்க தகுதி கிடையாது.

பிறப்பு, இருப்பிட சான்றுகள், சமூகப்பணிகள் செய்தமைக்கான ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பத்தை ஏப்.,30 அல்லது அதற்கு முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மூலம் கலெக்டர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றில் தகுதியானவற்றை கலெக்டர்கள் ஜூன் 30 முன்னதாக சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வுக்குழுவினரால் தேர்வு சிறந்த சமூக பணிக்காக செய்யப்படுவோருக்கு முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus