Home » Indian News » ஏடிஎம் மையத்தில் காவலாளி மீது தாக்குதல் – பணம் எடுக்க உதவி செய்யாததால்

ஏடிஎம் மையத்தில் காவலாளி மீது தாக்குதல் – பணம் எடுக்க உதவி செய்யாததால்

withdraw money

காஞ்சிபுரம் கனிகண்டீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்திவேல் (வயது 47), காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அவர் பணியில் இருந்தபோது வாலிபர் ஒருவர் போதையில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்தார். அவரால் ரகசிய நம்பரை பதிவு செய்து பணத்தை எடுக்க முடியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், காவலாளி சக்திவேலிடம் பணம் எடுக்க உதவி செய்யாதது ஏன்? என்று ரகளையில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இரவு 10 மணியளவில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் நண்பர்களுடன் மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த சக்திவேலை அவர்கள் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சின்ன காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் காவலாளியை தாக்கிய மர்ம கும்பலை பிடிக்க விசாரணை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus