Home » Author Archives: lokesh

Author Archives: lokesh

பைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள்

பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை விரதமிருந்து வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம். பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தைமாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதமிருந்து பைரவரை வணங்கி, கால பைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு விரதமிருந்து அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடைமாலை சாத்தி ...

மேலும் சில... »

அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு

tna-300x200

சிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது.இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப்புடன், நாளை கொழும்பு வரும் நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ...

மேலும் சில... »

திரிஷா திகில் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்

trisha-saree

திரிஷாவுக்கும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண்மணியனுக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வருகிற மார்ச் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்தையொட்டி சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள திரிஷா, தமிழ் படங்களில் நிறைய கதாபாத்திரங்கள் ஏற்று, தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். ஆனால், திரிஷா இதுவரையிலும் திகில் படங்கள் எதிலும் நடித்ததில்லை. திகில் படங்களை கண்டாலே திரிஷாவுக்கு பயம் என்றும், ஆகையால் இனிவரும் காலங்களில்கூட திகில் ...

மேலும் சில... »

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தகவல், ஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்!!

p-chidambaram343

2013-14-ம் நிதி ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் (யுபிஏ) பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை யுபிஏ அரசு மிகச் சிறப்பாக மேற் கொண்டதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். 2013-14-ஆம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஜிடிபி அட்ட வணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ...

மேலும் சில... »

மருத்துவ துறையில் அதிசயம் – ஆணாக பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

femaleborn_child_002

பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் நபர் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட் நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார். இவர் பிறக்கும்போதே, பெண்களுக்குரிய கர்பப்பை, இனப்பெறுக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்க கூடிய XY குரோமோசோம்களுடன் பிறந்துள்ளார். இவரது, 19 வயதில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால், மனமுடைந்து இவர், விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். இருப்பினும் ...

மேலும் சில... »

காளிதாசுக்கு விஜய் சேதுபதி அதிர்ச்சி கொடுத்தார்

Vijay-Sethupathi

பாலாஜி தரணிதரன் இயக்கிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் விஜய் சேதுபதி. இப்படம் கொடுத்த வெற்றி அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. அன்றுமுதல் இன்றுவரை பாலாஜி தரணிதரனும், விஜய் சேதுபதியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். பாலாஜி தரணிதரன் தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ...

மேலும் சில... »

ஐ.ஓ.பி. ரூ. 1,000 கோடி திரட்டுகிறது

iob

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) தனது மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ரூ. 1,000 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது. இதற்காக உத்தரவாதம் அல்லாத, முற்றிலும் மாற்றுவதற்கு இயலாத கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது. ஒரு கடன் பத்திரத்தின் முக மதிப்பு ரூ. 10 லட்சமாகும். இந்த கடன் பத்திரங்களுக்கு 10 சதவீத வட்டி ஆண்டுதோறும் அளிக்கப்படும். இந்த கடன் பத்திரங்கள் ஜனவரி 23-ம் தேதி தொடங்கப்பட்டாலும் பிப்ரவரி 4-ம் தேதி வரை இதில் முதலீடு செய்யலாம் என வங்கி வெளியிட்ட ...

மேலும் சில... »

விஜிபி நிர்வாக இயகுநர் விஜிபி ரவிதாஸ் பேட்டி, லாபத்துக்குத்தான் தொழில் செய்ய வேண்டும்!

70

40 ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதுதான் விஜிபி கோல்டன் பீச். ஆனால் இப்போது மக்களின் பொழுதுபோக்குக்கு பல இடங்கள் வந்துவிட்டதால், மக்களின் ரசனையை ஈடுசெய்யும் வகையில் புதுப்பிக்கும் நடவடிக்கையில் இருக்கிறது விஜிபி குழுமம். இந்த நிலையில் போட்டி, அந்த குழுமத்தின் மற்ற தொழில் செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸிடம் பேசினோம். அவருடனான விரிவான பேட்டியிலிருந்து… பள்ளியில் படிக்கும் போதே, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர். 1980களில் இயக்குநராக இணைந்தார். 1996-ம் ஆண்டு விஜிபி குழுமத்தின் ...

மேலும் சில... »

ராஜபக்சவின் தோல்வி நீதியைநோக்கிய பாதையில் நான்சந்தித்த பார்த்த கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது

Mark Ellis_CI

மகிந்த ராஜபக்சவின் 2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வி. நீதியை நோக்கிய பாதையில் நான் சந்தித்த,. பார்த்த மிக கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது. அரசபடையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இறுதி வாரங்களில் 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அரச படையினர் யுத்த குற்றங்களிலும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் எந்த நீதிமன்றமும் அது குறித்து ஆராயவில்லை. 2010 இல் லண்டனின் சனல்4 படுகொலைகள் தொடர்பாக மிக திறமையான புலனாய்வு ஓளிநாடாவை வெளியிட்டது.அந்த வீடியோவில் காணப்பட்ட படங்கள் குறித்த எழக்கூடிய சட்டரீதியான ...

மேலும் சில... »

நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர ஏனையவற்றில் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்… அமெரிக்காவில்

Apples

அமெரிக்க ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர, ஏனைய ரக ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க கலிபோர்னியா பிராந்தியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஆப்பிள், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கெரமல் ஆப்பிள், கிரேன் ஸ்மித் ஆப்பிள் மற்றும் காலா வகையான ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற ஆப்பிள்களில் பக்றீரியா தொற்று காணப்படுவதாக ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus