முதன் முதலாக ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் கன்னி சுவாமிகள், மாலையணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து மண்டல பூஜையன்று அங்கிருக்குமாறு செல்ல வேண்டும் , மற்றவர்கள், கார்த்திகையில் தங்களுக்கு வசதிப்படும் நாளில் சென்று வரலாம்.
சென்று வந்தபிறகு, மீண்டும் தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடாமல், நாம் பெற்ற விரதப் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் ஐயப்பனின் பேரருள் நமக்கு கிடைக்கும். சபரிமலை செல்லவிரும்பும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் நாள், நட்சத்திரம் திதி ஆகியவை பார்க்கத் தேவை இல்லை. தவறினால் ஏதாவது ஒரு புதன்கிழமையிலோ, சனிக்கிழமையிலோ அல்லது உத்தர நாட்சத்திரம் வரும் நாளிலேயோ மாலை அணியலாம்.
மாலை அணிந்தும் சந்திக்கும் ஆண் பக்தர்களை ஐயப்பா என்றும், பெண் பக்தர்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டா என்றும், சிறுமிகளைக் கொச்சி என்றும் அழைக்க வேண்டும்.
Nice article. Are updating regular updates on Lord ayyapan.