Home » Indian News » சி.பி.ஐ. அதிரடி, சாரதா நிதி நிறுவன மோசடி முன்னாள் மத்திய மந்திரி கைது

சி.பி.ஐ. அதிரடி, சாரதா நிதி நிறுவன மோசடி முன்னாள் மத்திய மந்திரி கைது

201502010330505117_Shraddha-financial-fraudFormer-central-minister_SECVPF

சாரதா நிதி நிறுவன மோசடியில் முன்னாள் மத்திய மந்திரி மாதாங் சிங்கை சி.பி.ஐ. கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சாரதா நிதி மோசடி, மேற்கு வங்காள மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், கிழக்கு இந்திய மாநிலங்களில் முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஊழலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேர், மேற்கு வங்காள போக்குவரத்து துறை மந்திரி மதன் மித்ரா ஆகிய பிரபலங்களும் சிக்கி, கைதாகி உள்ளனர். முன்னாள் மத்திய மந்திரி, இந்த நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடியில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவரும், நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில், மத்திய மந்திரி பதவி வகித்தவருமான மாதாங் சிங் (வயது 53) மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவரிடம் மத்திய அமலாக்கப்பிரிவு ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது. விசாரணைக்கு பின் கைது, அதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யும் அவரை விசாரணைக்காக அழைத்தது. அவர் டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் நேற்று விசாரணைக்காக ஆஜர் ஆனார். அவரிடம் சாரதா குழுமத்தின் தலைவர் சுதீப்தோ சென்னுடனான வர்த்தகப்பரிமாற்றங்கள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

7 மணி நேரம் நடந்த விசாரணையை தொடர்ந்து அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘ஒரு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவது குற்றம் அல்ல. எனக்கு சுதீப்தோ சென்னை தெரியாது’’ என அவர் நிருபர்களிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus