ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் புதிதாக உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் பான் கீ மூன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைகளில் எவ்வாறு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜொவிக் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஐக்கிய நாடுகள் விசாரணைப் பொறிமுறைமை தொடர்பில் சாதக நிலைமை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.