Home » News » எல்லைகளற்ற மருத்துவர்கள் உதவிப் பணிகளுக்கு சுடானிய அரசாங்கம் தடைபோடுகிறது

எல்லைகளற்ற மருத்துவர்கள் உதவிப் பணிகளுக்கு சுடானிய அரசாங்கம் தடைபோடுகிறது

msb11544_medium_wide-3b02da5eed559d0e3afbf8762c8788b037aceccf-s4-c85

சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனமான எல்லைகளற்ற மருத்துவர்கள் சங்கம், சுடானில் செயலாற்றிவந்த தமது அவசர உதவிக் குழுக்களை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது.

மோதல் பகுதிகளில் அவர்கள் செயலாற்றுவதற்கு சுடானிய அதிகாரிகள் வேண்டுமென்றே தடை போடுகிறார்கள் என்பதால் இந்த முடிவை எடுப்பதாக அவ்வமைப்பு கூறுகிறது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற தார்ஃபுர், புளூ நைல் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளுக்கு உதவிக் குழுக்கள் செல்வதை அரசாங்கம் திட்டமிட்டு தடுக்கிறது என எல்லைகளற்ற மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுடானின் தெற்கு எல்லையில் ஏற்பட்டுள்ள பல்வேறு கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுடானிய இராணுவம் இப்பகுதிகளில் சண்டையிட்டு வருகிறது. தகராற்றுக்குரிய பகுதிகளில் ஒன்றான நூபா மலைகளில் மருத்துவமனை ஒன்றின் மீது சுடானிய விமானப் படை வேண்டுமென்றே குண்டு வீசியதாக சென்ற வாரம் எல்லைகளற்ற மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus