Home » Asia News » Srilanka News

Srilanka News

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு

4

தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், அது தொடர்பான ஆய்வறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன் நாச்சியப்பன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவின் செயல்பாடு, இலங்கை இராணுவத்தினால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றை ஆய்வு செய்ய எம்.பி. சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான பாராளுமன்ற நிலைக் (எம்.பி.க்கள்) குழு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறது. இந்த குழு இராமநாதபுரம், ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய இடங்களில் ...

மேலும் சில... »

நாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து

3

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து இந்திய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது பற்றி தி ஹிந்து ஊடகம் வௌியிட்டுள்ள செய்தியில், மதுரை ஆனையூர் தர்மதாஸ் (55) இலங்கையின் மன்னார் அருகே உள்ள மாடியபட்டிதான் என் சொந்த ஊர். 1991-ல் தமிழகம் ...

மேலும் சில... »

எரிபொருள் குழாயில் வெடிப்பு

2

கொழும்பு துறைமுகம் முதல் கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வரை எரிபொருள் கொண்டுசெல்லப்படும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த வெடிப்பு ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதனால் குறித்த குழாயில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது குறித்த குழாயின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை இந்தப் பிரச்சினை தொடர்பில் பலமுறை முறைப்பாடு செய்தும் கடந்த கால அரசாங்கம் பாராமுகமாக இருந்ததாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. சில வருடங்களாகவே இந்தக் ...

மேலும் சில... »

முஸ்தபா இராஜினாமா?

1

விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வௌிநாடு சென்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. எதுஎவ்வாறு இருப்பினும் சட்டத்தரணியாக முழுநேரம் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலக உத்தேசித்துள்ளதாகவும் அத தெரண இன்று முற்பகல் வினவியபோது பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ...

மேலும் சில... »

இலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு!

இலங்கையின் தலாவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். 20 வயதுடைய மனோஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸாரிடமிருந்து தப்பியோடிய இளைஞன் நேற்று மாலை 3 மணியளவில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 40 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து காணாமல் போயிருந்தார். இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் நேற்றும் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சில... »

அகதிகளை திருப்பி அனுப்பவேண்டாம்-மத்திய அரசிற்கு வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தீர்மானங்களின் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்துத்துவா கொள்கைகள் பொருளாதாரக் கொள்கைகள் இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பொதுக் குழுவில் ம.தி.மு.க தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப முயலும் நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க வலியுறுத்தியுள்ளது. இந்துத்துவா கொள்கைகள் பொருளாதாரக் கொள்கைகள் இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்தியில் ...

மேலும் சில... »

இலங்கையில் ஆடைத்தொழிற்காலைகளில் பல மில்லியன் மோசடி!

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாரிய ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முதலீட்டுச்சபையினால் அனுமதிப்பெற்ற 2 ஆடை தொழிற்சாலைகள் கடந்த வருடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட கொள்கலன்களை வரி செலுத்தாது இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடைகளின் இறுதி தயாரிப்புகளுக்காக மூலப்பொருட்களான துணிகள் புதிய ஆடைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் புலனாய்வுப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குற்றவாளிளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும் முதலீட்டு சபையினால் அனுமதிபெற்ற குருநாகலையில் அமைந்துள்ள இரண்டு ஆடைதொழிற்சாலைகள் ...

மேலும் சில... »

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

புதிய அரசே காணாமல் போன உறவுகள் குறித்து தீர்வினை வழங்க வேண்டும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோர் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டமானது நாளை காலை 9மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்டவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. இவ்வாறு நடைபெறவுள்ள போராட்டத்தையடுத்து அமைதியான முறையில் பேரணியான சென்று அரச அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் வழங்கப்படவுள்ளது. எனவே குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை ...

மேலும் சில... »

புலம்பெயர் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்படும்!

புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தடை புதிய மைத்திரி அரசிலும் நீடிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித். பி. பெரேரா தெரிவித்தார். வாரப்பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு கடந்த மகிந்த அரசில் புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய அரசு தோன்றியுள்ளது. இந்த நிலையில் தமிழ் அமைப்புக்களின் தடை குறித்து பிரதி அமைச்சரிடம் கேட்கப்பட்ட ...

மேலும் சில... »

இலங்கையின் தலவாக்கலையில் மக்கள் போராட்டம் காவல்துறையினர் மீதும் தாக்குதல்!

இலங்கையின் தலவாக்கலை பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் நேற்று மாலை 3 மணியளவில் இளைஞர் ஒருவர் 40 அடி உயரத்தில் இருந்து பாய்ந்து காணாமல் போன சம்பவத்தில் பொலிஸாரை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ரயில் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் திரும்பி நானுஊயா வரை ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus