Home » Education News

Education News

கேரியரை உயர்த்தும் ‘கோரியோகிராபி’

32

கலைநயத்துடன் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உடலியல் செயல்பாடு தான் நடனம். ஒரு நடன நிகழ்ச்சி நம்மை மகிழ்விக்கிறது என்றால், அது பல நாட்கள் முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தீவிர பயிற்சி செய்யப்பட்டு, தயார் செய்யப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். * கோரியோகிராபர் என்பவர் யார்? ஒரு நடனத்தை வடிவமைக்கும் செயல்பாடு தான் கோரியோகிராபி எனப்படும். ஒரு நடனத்தின் அசைவுகள், அமைப்புகள் ஆகியவற்றை திட்டமிட்டு, தொடர்ச்சியாக அமையும் வகையில் ஒரு நடன செயல்பாட்டை அமைத்து, அதை, பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாய் உருவாக்குபவர் தான் ...

மேலும் சில... »

ரேடியோகிராபி படித்தால் வேலை ரெடி

31

இன்றைய உலகில் மருத்துவத்துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. மருத்துவத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுனர்களின் தேவை உள்ளது. தற்போதைய சூழலில் மாணவர்கள் மருத்துவத்துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மருத்துவத்துறையின் ஒரு பகுதியான ரேடியோகிராபி துறையில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மருத்துவத்துறையில் நோய் கண்டறியும் பகுப்பாய்வு சோதனை என்பது மிகவும் முக்கியமானது. ஒரு நோயை குணப்படுத்துவதற்கான முதல் படிநிலை இதுவாகும். எக்ஸ்ரே, ப்ளுரஸ்கோபி, அல்ட்ராசவுண்ட், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஆங்கியோகிராபி, பி.இ.டி. தொழில் நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி நோய் மற்றும் ...

மேலும் சில... »

அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க அரசு உத்தரவு

28541

ராமநாதபுரம்: தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; மாணவர்களை உடல், மனதளவில் தொந்தரவு செய்யக் கூடாது. சமூகத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் குழந்தைகள், பள்ளி சேர்க்கையின்போது, 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட அடிப்படைக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் ...

மேலும் சில... »

பிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

28540

சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான தத்கல் திட்டத்தின் கீழ், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அரசு தேர்வுத்துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிப்., ...

மேலும் சில... »

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

young_people_1

முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற ஏப்.,30க்குள் கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும், என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 15 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் சமூக தொண்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அங்கீகாரம் அளித்தல் ஆகியவற்றிக்காக ஆண்டுதோறும் ஆக.,15 சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படுகிறது. மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஆறு நபர்களுக்கு முதல்வரின் மாநில இளைஞர் விருது, பதக்கம், பாராட்டுச்சான்று, 50,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும். தகுதிகள்: தமிழகத்தில் சமூக நலனுக்காக தொண்டு ...

மேலும் சில... »

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு

24

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் வேட்டையைத் துவங்கி உள்ளனர். பொதுவாக, 14 வயது வரையிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. ஆனால், தடையை மீறியும் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், 2001ல், 4.19 லட்சம் குழந்தை தொழிலாளர் இருந்தனர். அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், 29,656 பேராக குறைந்து விட்டது என தமிழக அரசு ...

மேலும் சில... »

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கான கையேட்டை வெளியிட்ட ஏ.ஐ.சி.டி.இ

23

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல், கல்வி நிறுவனங்கள் இயங்கக்கூடாது என, வலியுறுத்தி உள்ளது. புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குதல், கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., இடையே, பனிப்போர் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு, இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு வர, மேற்கூறிய பொறுப்புகளை, ஏ.ஐ.சி.டி.இ., கண்காணிக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவு அடிப்படையில், இந்த ஆண்டில், புதிய ...

மேலும் சில... »

தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்

6

இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் /  தனித் தேர்வர்களும் பயன் பெறும் வகையில் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஆணை ...

மேலும் சில... »

அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

அரசு விழாக்களின்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புறக்கணிப்பு ஏன்? தமிழகத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு, தனியார் பள்ளிகளின் கல்வித்தரம், ஒழுக்கம், பல்திறன் வெளிப்பாடு என, பெற்றோர் மத்தியில் கவர்ச்சிகரமான பல ...

மேலும் சில... »

பிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி!

28484

பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்களை, செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மார்ச்சில்… பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு மாணவருக்கான, 2014 – 15ம் கல்வியாண்டு பொதுத்தேர்வு, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. பொதுத்தேர்வு மாணவருக்கான செய்முறை தேர்வு (பிராக்டிக்கல்) நடத்தப்படும். பிளஸ் 2 மாணவருக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus