Home » Indian News (page 10)

Indian News

ஒபாமா பேருரையில் பதியத்தக்க 10 கருத்துகள்

9

‘இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்’ (India and America: The Future We Can Build Together) என்ற தலைப்பில் டெல்லி டவுன் ஹாலில் அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். அவர் பேச்சில் இருந்து குறிப்பிடத்தக்க 10 கருத்துகள்: 1.ஒரு தேசத்தின் வெற்றியானது அத்தேசத்தின் பெண்கள் எட்டும் உயரத்தைப் பொருத்தே அமையும். ஒவ்வொரு மகளும், ஆண்மகனுக்கு சமமானவளே. 2.இழிவாக கருதப்படும் தொழிலை செய்பவர்கள் கனவுகளும் நாம் காணும் கனவுகளுக்கு நிகரானவையே. அதிர்ஷ்டவசமாக நாம் கனவு காண சுதந்திரம் உள்ள நாடுகளில் ...

மேலும் சில... »

எனது பெயரை ஒபாமா குறிப்பிட்டதில் பெருமை கொள்கிறேன்: ஷாரூக்கான்

8

இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா மத நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து பேசும்போது தனது பெயரை குறிப்பிட்டதை பெருமையாக கருதுவதாக இந்தி நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷாருக்கான் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ஒபாமா மத நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து பேசும்போது எனது பெயரை குறிப்பிட்டதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். ஆனால், அவருக்காக என்னால் பாங்கரா டான்ஸ் ஆட முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் அவருக்காக ‘சய்ய சய்யா’ ...

மேலும் சில... »

ஹமீத் அன்சார் ‘சல்யூட்’ சர்ச்சை: துணைக் குடியரசுத் தலைவரின் சிறப்பு அதிகாரி விளக்கம்

7

குடியரசு தினவிழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நெறிமுறைக்கு உட்பட்டே துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி சல்யூட் செய்யவில்லை என்று அவரது சிறப்புப் பணி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, சல்யூட் செய்யாதது குறித்த சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் விதமாக அதற்கான விளக்கத்தை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் சிறப்புப் பணி அதிகாரி குர்தீப் சிங் சப்பல் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

மேலும் சில... »

குடியரசு தின விழாவில் இனப் பாகுபாடு: வடகிழக்கு மாநில பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த அவலம்

6

குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டு காணச் சென்ற தன்னிடம் சிலர் இனப் பாகுபாடு காட்டி இடையூறு செய்ததாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி வழக்கறிஞர் வேதனை தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர் லியூ நோஷி. கடந்த 12 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருகிறார். தற்போது பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் ராணுவ அணிவகுப்பைக் காண வேண்டும் என்று அனுமதி பெற்று அதில் கலந்துகொண்டார். நாட்டின் 66-வது குடியரசு தினவிழாவின்போது மோசமான வானிலை குறுக்கிட்டு இடையூறு செய்ததைப் போல, அணி வகுப்பை ...

மேலும் சில... »

அலைக்கற்றை ஏலம் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு

தொலைபேசி அலைக்கற்றை ஏலம் பிப்ரவரி 25-ம்தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 6-ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. 800, 900, 1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளுக்கான இந்த ஏலத்தை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அலைக்கற்றை ஏலத்தை ஒத்திவைத்துள்ள மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம், மார்ச் 4-ம் தேதி ஏலம் தொடங்கும் என தெரிவித்துள்ளது. மேலும், அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் ...

மேலும் சில... »

ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும்படி வாக்காளர்களிடம் கூறக் கூடாது: கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

5d9e637b-ebaf-4065-aca4-10bda9e73178_S_secvpf.gif

ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும்படி வாக்காளர்களிடம் கூறக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வரும் கெஜ்ரிவால், தனது பிரச்சாரக் கூட்டங்களில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருகிறார். சமீபத்தில் பிரச்சாரம் செய்த அவர், “தேர்தலில் ஓட்டு போடுவதற்கு காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளும் உங்களுக்கு பணம் தருவார்கள். அதை மறுக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால், ஓட்டுகளை துடைப்பம் சின்னத்துக்கு போடுங்கள்’’ என்று பேசினார். இதற்கு ...

மேலும் சில... »

பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி

38f648a8-d1be-444b-afff-d90b06317550_S_secvpf.gif

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25-ந் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக, அங்கிருந்து நேரடியாக டெல்லி பாலம் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு தயாராக நின்றிருந்த தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில், தன் மனைவி மிச்செலியுடன் ஏறினார். அவர்களை ...

மேலும் சில... »

மந்திரி கே.எம்.மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கேரளாவில் முழு அடைப்பு

d0716d5d-df03-4b36-a2c1-5473fd734f6c_S_secvpf.gif

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில், கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவர் கே.எம்.மாணி நிதித்துறை மந்திரியாக உள்ளார். இவர் மீது கேரள பார் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயல் தலைவர் பிஜூ ரமேஷ், பார் ஓட்டல்களுக்கு உரிமம் வழங்க ரூ.3 கோடியே 10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறினார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ள நிதி மந்திரி கே.எம்.மாணி தனது பதவியை ...

மேலும் சில... »

நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகன்சிங் வாக்குமூலத்துடன் சி.பி.ஐ. அறிக்கை கோர்ட்டில் தாக்கல்

7b3aef65-dd95-4162-a69d-154148c04ab9_S_secvpf.gif

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், சில ஆண்டுகள் நிலக்கரி துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, 2005-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் தாலபிரா-2 என்ற நிலக்கரி சுரங்கம், ண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, அடுத்தடுத்து இரண்டு தடவை பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பிறகு, இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த குற்றச்செயலும் நடக்கவில்லை என்று சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை சி.பி.ஐ. கோர்ட்டு ஏற்கவில்லை. மன்மோகன்சிங்கிடமும், அப்போதைய ...

மேலும் சில... »

ஒபாமா – மத ரீதியாக பிளவுபடாமல் இருந்தால் இந்தியா தொடர் வெற்றிகளை பெறும்

16377977-standard

மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இன்று தனது பயணத்தின் கடைசி கட்டமாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். தலைநகர் டெல்லியில் உள்ள சிறி கோட்டையில் கூடிய மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஒபாமா மத ரீதியாக பிளவுபடாமல் இருக்கும் வரை இந்தியா தொடர் வெற்றிகளை பெறும் என கூறினார். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்து, சீக்கியர், பௌத்தர் மற்றும் ஜைனர்கள் என பல சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் மதத்தால் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஆனாலும், மனத்தால் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus