Home » Indian News (page 2)

Indian News

மத்திய அரசு தகவல் – 1984 சீக்கிய கலவரம்; போலீசால் முடிக்கப்பட்ட வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கிறது

Sikh-Genocide-Demonstation-1-November-2012

போலீசால் முடிக்கப்பட்ட 1984 சீக்கிய கலவரம் வழக்கில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை அமைக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1984–ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை போலீசால் முடிக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கு தொடர்பாக முழுவிசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சீக்கிய கலவரம் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு ...

மேலும் சில... »

தில்லி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி கடும் தாக்கு – முதுகில் குத்தும் கட்சி ஆம் ஆத்மி

narendra-modi

தில்லி நகரவாசிகளை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு, முதுகில் குத்தும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். தில்லி சட்டப்பேரவைக்கு வரும் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, கிழக்கு தில்லி விஷ்வாஸ் நகரில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். இதில் பங்கேற்பதற்காக ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி பிற்பகல் 4.30 மணியளவில் வந்தார். இந்தியாவின் அடையாளம் தில்லி – இதைத்தொடர்ந்து, மைதானத்தில் திரண்டிருந்த ...

மேலும் சில... »

அவசர கால ஒத்திகைக்காக கிராம மக்கள் வெளியேற்றம் – கூடங்குளம் அணு மின்நிலையத்தில்

Kudankulam-n-pl22922

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணு மின்நிலையம் தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் அமைந¢துள்ள இருக்கன்துறை கிராமத்தில் கலெக்டர் கருணாகரன், அணு மின்நிலைய வளாக இயக்குநர் சுந்தர் முன்னிலையில் ...

மேலும் சில... »

ஜாம் நகரில் போர் விமானம் நொறுங்கி விழுந்தது பைலட் உயிர் தப்பினார் – குஜராத்

nigeria-crash-irpt

ஜாம்நகர்: குஜராத் அருகே, இந்தியப் போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம், நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், திடீரென நொறுங்கி விழுந்து, அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து, ஜாம்நகர் எஸ்பி நீரஜ் பட்குஜார் கூறும்போது, மிக் 21 ரக போர் விமானம், ஜாம்நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் பெட் கிராமத்தில் விழுந்து நொறுங்கியது. அதற்கு முன்பாக, விமானத்தின் பைலட், குளம் ...

மேலும் சில... »

கிரிக்கெட் வாரிய தேர்தலில் சரத்பவார் போட்டி

b3bda0b3-124a-4788-977f-d830c4686441_S_secvpf.gif

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது கிரிக்கெட் வாரிய தேர்தலை 6 வாரங்களுக்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. என்.சீனிவாசனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஐ.பி.எல். அணியா? கிரிக்கெட் வாரியமா? இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரியான சரத்பவார் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் பங்கேற்று போட்டியிடுகிறார். ...

மேலும் சில... »

கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம்

852064818

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்த இவர், மார்ச் 17, 1962ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். தனது சிறு வயதிலேயே விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக, வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தை முடித்தவுடன் அமெரிக்கா சென்றார். இவர் மார்ச் 1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். 2003ஆம் ஆண்டு ஜனவரி ...

மேலும் சில... »

கேரளா–தமிழக எல்லையில் ரகசிய காமிராவில் பதிவான மாவோயிஸ்டுகள் புகைப்படம்

03ec2d4d-010a-4074-9841-d98191618a09_S_secvpf.gif

கேரளாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டுப்பகுதிகளில் பதுங்கி உள்ள இந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீரென்று நகர்ப்புறங்களுக்கு சென்று தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் பாலக்காடு, வயநாடு, கண்ணூர், கொச்சி ஆகிய இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அரசு அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்குள் புகுந்து தீ வைப்பு பொருட்கள் சூறை என்று மாவோயிஸ்டுகளின் வன்முறை ஈடுபட்டனர். இதனால் மாவோயிஸ்டு தீவிரவாதிகளை ஒடுக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. கேரளா, ...

மேலும் சில... »

டெல்லியில் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல்: விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு-மத்திய அரசு முடிவு

75cfa4a9-ab24-41fa-ba32-05183e4d038e_S_secvpf.gif

கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி (அப்போது பிரதமராக இருந்தார்) அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டெல்லியில் சீக்கிய இனத்தவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட பலரின் உறவினர்கள் கொடுத்த புகாரை காவல்துறையினர் முறையாக விசாரிக்காமல் முடித்துக்கொண்டதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு இது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறி நீதிபதி ஜி.பி.மாத்தூர் ...

மேலும் சில... »

நடிகர் மிதுன் சக்கரவர்த்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை;சாரதா சிட்பண்ட் மோசடி

c9bb9556-a212-4006-86d1-b2fff9c15496_S_secvpf.gif

மேற்கு வங்காளத்தில் நடந்த பல ஆயிரம் கோடி சாரதா சிட்பண்ட் மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிக்கி தவிக்கிறது. அந்த கட்சியின் 2 எம்.பி.க்களும், ஒரு மந்திரியும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு திரிணாமுல் காங்கிரசில் முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் முன்னாள் ரெயில் மந்திரி முகுல்ராய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே சாரதா குழும கணக்குகளை ஆய்வு செய்ததில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கும் கோடிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிதுன் ...

மேலும் சில... »

நிர்வாண நிலையில் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட 3 வயது பெண் குழந்தை: பீகாரில் கொடூரம்

a1b04f84-ac8c-4709-92e9-d8f2dd1ab0cb_S_secvpf.gif

பீகார் மாநிலத்தில் தர்பாங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் கடந்த வியாழனன்று, தனது 3 வயது பெண் குழந்தையுடன் தயானந்த மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். தாயும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்தபோது அங்கிருந்த அறிமுகம் இல்லாத நபர் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் கழித்து சாக்லெட் வாங்கித் தருவதாக சொல்லிவிட்டு குழந்தையை வெளியே அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தை திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் குழந்தையை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மதுபானி ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus