Home » Indian News (page 20)

Indian News

தொடர்பில் இருப்பதாக தகவல்: பாரதீய ஜனதா கட்சியில் கங்குலி இணைகிறார்?

8d4a32f6-1dea-46f6-88bc-df0bb734e94c_S_secvpf.gif

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. ஓய்வுக்கு பிறகு அவர் டெலிவிஷன் வர்ணணையாளராக இருக்கிறார். இந்த நிலையில் கங்குலி விரைவில் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் சீனியர் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும், இதே போல பா.ஜனதா கட்சியும் கங்குலியுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை பிடிக்கும் இலக்குடன் பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ...

மேலும் சில... »

டெல்லி பா.ஜனதா முதல்வர் வேட்பாளர் கிரண்பேடிக்கு சாந்திபூஷண் வாழ்த்து: கெஜ்ரிவால் அதிருப்தி

17bcd3c4-7d46-4579-8108-23634f2a5827_S_secvpf.gif

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் போலீஸ் அதிகாரியான கிரண்பேடி முன்பு அன்னாஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், வக்கீல் சாந்தி பூஷண் ஆகியோர் இணைந்து நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார். ஊழல் எதிர்ப்பு இயக்க முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். கெஜ்ரிவால் புதிய கட்சி தொடங்கிய போது கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கட்சியில் சேராமல் நடுநிலை வகித்தார். ஆனால், சாந்தி பூஷண் கெஜ்ரிவாலுக்கு ...

மேலும் சில... »

ஆல் இண்டியா ரேடியோ மற்றும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் ஒபாமா–நரேந்திரமோடி பேசுகிறார்கள்

af771ec8-2f9f-4bcb-ace6-a95a3c3dd7b6_S_secvpf.gif

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். இதை ஏற்று ஒபாமா வருகிற 25–ந்தேதி டெல்லி வர உள்ளார். அவர் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். 25–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்து சேரும் ஒபாமாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒபாமா, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுவார். பின்னர் ஒபாமா ராஜ் காட்டில் ...

மேலும் சில... »

தலித் இளைஞர்களை மொட்டையடித்து ஊர்வலம்: 18 ஆண்டுக்கு பின் ஆந்திர எம்.எல்.ஏ. மீது விசாரணை-ஐகோர்ட்டு உத்தரவு

54246c97-fff6-454f-96d9-1d47b056ee93_S_secvpf.gif

கிழக்கு கோதாவரி மாவட்டம் திராட்சா ராமம் என்ற கிராமத்தில் 3 தலித் இளைஞர்கள் மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சம்பவம் 1997–ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் ராமச்சந்திராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோட்டா திரி மூர்த்தலு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் தவிர மேலும் சிலர் மீதும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விசாகப்பட்டினம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது. ஆனால் வழக்கு ...

மேலும் சில... »

முப்படை அதிகாரிகளுடன் தமிழக அரசு ஆலோசனை – சென்னையில் குடியரசு தினவிழா

r8

சென்னையில் மெரினா கடற்கரையில் 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக கவர்னர் தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்த விழாவில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள், முப்படையின் ராணுவ அணிவகுப்பு, அரசுத் துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே இந்த விழா குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், உள்துறை முதன்மைச் ...

மேலும் சில... »

பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு காவல் அதிகாரி பயிற்சி – உ.பி.யில் அகிலேஷ் திட்டம்

99cbc07b-901f-4034-93ca-9c341fedd755_S_secvpf

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ‘சிறப்பு காவல் அதிகாரி’களுக்கான பயிற்சி அளிக்கும் ‘தேவதைகள்’ என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின்படி, உத்திரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதிலும் உள்ள 1,170 பள்ளிகளில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களில் ஒரு வகுப்பிற்கு 2 அல்லது 3 பேர் வீதம் 70,000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு ‘சக்தி வாய்ந்த தேவதைகள்’ எனும் தற்காப்புக்கலை பயிற்சி கொடுக்கப்பட்டு ‘சிறப்பு காவல் அதிகாரி’ என்ற பதவியும், ...

மேலும் சில... »

என்.எல்.சி. அதிகாரி, மனைவி உள்பட 3 பேர் பலி! பண்ருட்டி அருகே அரசு பஸ் மீது கார் மோதல்!

download (3)

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 45). இவர் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் துணை முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராணி(42). இவர்களுடைய மகன் கிருஷ்ணகுமரன் சென்னையில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் நெய்வேலியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் கீர்த்திக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கிருஷ்ணகுமரன் தற்போது தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கார்த்திகேயன், தனது மனைவி ராணி மற்றும் ...

மேலும் சில... »

16 வயது மனித டிரான்ஸ்பார்மர் – 11000 வோல்ட் மின்சாரத்தை தாங்கும்

70477afd-de3a-4736-83bf-746ec410e5cd_S_secvpf

அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் இருந்த ஸ்குருடிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால், அவனுக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது. இந்த சம்பவத்தால் ஆச்சர்யமடைந்த ஜங்ரா இரண்டு வாரங்கள் ...

மேலும் சில... »

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச முக கவசம், பன்றி காய்ச்சல் பரவும் அபாயம்!!

14072014011920tirupati

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு தெலுங்கானாவில் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று வரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் உயிர் இழந்து உள்ளனர். பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தெலுங்கானா அரசு தீவிரம் காட்டி உள்ளது. முதல்–மந்திரி சந்திரசேகரராவ் கேட்டுக் கொண்டதின் பேரில் 3 பேர் கொண்ட மத்திய சுகாதார குழு ...

மேலும் சில... »

ஜெயலலிதா சொத்து மதிப்பீடு பட்டியல் பெங்களூர் ஐகோர்ட்டில் தாக்கல்!

jayalalitha-wallpapers-5

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா சொத்து விளக்கப்பட்டியலை அவரது வக்கீல் தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட் டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து வருகிறார். நேற்று நடந்த 12–வது நாள் விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல் நாகேஸ்வரராவ் வாதிடுகையில் ஜெயலலிதாவின் சொத்து கணக்கு விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டு உள்ளது. அவரது பழைய வருமானங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. கம்பெனிகளின் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus