Home » Indian News (page 30)

Indian News

ஓட்டுக்கு பணம் வாங்குங்கள்: கெஜ்ரிவாலின் சர்ச்சை பேச்சு வீடியோ தேர்தல் கமிஷனிடம் ஒப்படைப்பு

3e109f08-71f0-4f65-878b-d8634fc65121_S_secvpf.gif

டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வும் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ பதிவை டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தலைமை தேர்தல் கமிஷனுக்கு இன்று அனுப்பியுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, உத்தம்நகர் சட்டசபை தொகுதியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- இது தேர்தல் காலம். எனவே, பா.ஜனதா மற்றும் காங்கிரசார், ஓட்டுக்கு பணம் ...

மேலும் சில... »

குஜராத்தில் ஒட்டகத்திடம் கடிபட்ட நபர் பலி

f1a196e9-51cb-490a-bc21-9ce7cc27da57_S_secvpf.gif

குஜராத் மாநிலத்தில் ஒட்டகத்திடம் கடிபட்ட நபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அகமதாபாத் மாவட்டத்தின் ஜமுனா நகர் குடிசைப்பகுதியில் வசித்து வரும் கோவிந்த் திரிவேதி (45) என்பவர் நேற்றிரவு தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஒட்டகம் அவரது தலையை கவ்விக் கடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியது என வழக்குப்பதிவு செய்த போலீசார் ...

மேலும் சில... »

மத்திய சென்சார் போர்டு தலைவராக பஹ்லாஜ் நிஹாலானி நியமனம்

e5f269f4-d324-455d-99d4-595c70a29ee0_S_secvpf.gif

மத்திய சென்சார் போர்டின் தலைவராக பஹ்லாஜ் நிஹாலானி நியமிக்கப்பட்டுள்ளார். திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு அமைப்பு சான்றிதழ் அளித்த பின்பே திரையிட முடியும். மத்திய சென்சார் போர்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சென்சார் போர்டு மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்சார் போர்டு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அதிகாரிகள் அல்லாத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள். பல்வேறு மாநில மொழி படங்களுக்கு பிராந்திய சென்சார் போர்டுகள் தணிக்கை சான்றிதழ் வழங்கும். இங்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டால் மத்திய ...

மேலும் சில... »

ஒபாமா தாஜ் மஹாலுக்கு செல்லும் 27-ம்தேதி டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட திட்டம்

9e55dfdc-99b5-4a10-b243-ce2d9e419c02_S_secvpf.gif

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க மனைவி மிச்சேல் ஒபாமாவுடன் செல்லும்போது டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம்தேதி இந்தியா வருகிறார். உலக தீவிரவாதிகளின் ‘டாப் ஹிட் லிஸ்ட்’ பட்டியலில் இருக்கும் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகளை பார்வையிடவும், உரிய ...

மேலும் சில... »

தணிக்கை வாரிய விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது – மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி

Arun Jaitley

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன் உட்பட 13 பேர் ராஜினாமா செய்துள்ள விவகாரம் காங்கிரஸாரால் அரசியலாக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சாடியுள்ளார். தேரா சச்சா சவுதா தலைவர் ராம் ரஹீம் சிங் படமான மெசஞ்சர் ஆஃப் காட் திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்ட விவகாரமே இப்போது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் அருண் ஜேட்லி தனது முகநூலில் இது பற்றிய எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி திரைப்பட சான்றிதழ் அளிக்கும் விவகாரத்தைப் பொறுத்தவரை தன்னை ...

மேலும் சில... »

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

kodumai

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவரது கிளினிக்கையும் அடித்து நொறுக்கினர். உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரின் பக்பத் சாலையில் உள்ள கிளினிக்கிற்கு, கைவலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கல்லூரி மாணவி ஒருவர் தனது அத்தையுடன் வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அர்பிட் தியாகி, பிஸியோதெரபி சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அறையிலிருந்து சில நிமிடங்களில் வெளியே ஓடிவந்த மாணவி தனது அத்தையிடம் மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அழுதபடி ...

மேலும் சில... »

ஆசிட் வீசிய பெண் – ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி

acid-attack

பீகாரில் பெண் ஒருவர் ஆசிட் வீசியதில் காயமுற்ற ஐந்து பேர் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரபா ஷா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்தன் பாஸ்வானுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற பிரபா, பாஸ்வான் மற்றும் அவரது மூன்று குடும்ப உறுப்பினர்கள் மீது ஆசிட்டை ஊற்றினார். அப்போது உடனிருந்த இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது குழந்தையின் மீதும் ஆசிட் பட்டது. இந்த சம்பவத்தில் காயமுற்ற ஐந்து பெரும் உடனடியாக அருகில் உள்ள சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

மேலும் சில... »

ஏழு மாநிலங்களுக்கு புதிய கவர்னர் நியமனம் – ராஜ்நாத் சிங்

Rajnath

ஏழு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார். பீகார், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களை சேர்ந்த கவர்னர்களுக்கான பணி காலியாக உள்ளது. மேலும், பஞ்சாப் கவர்னர் ஷிவ்ராஜ் பாட்டில் வருகிற 21-ம் தேதியும், இமாச்சல பிரதேச கவர்னர் ஊர்மிளா சிங் வருகிற 24-ம் தேதியும் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். மேற்கு வங்க கவர்னராக உள்ள கேஷாரி நாத் திரிபாதி, பீகார் மற்றும் மேகாலயா மாநிலங்களின் கவர்னர்களுக்கான பணிகளையும் கூடுதல் ...

மேலும் சில... »

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்யுடன் சந்திப்பு

Mangala

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துக்கொண்ட உயர்மட்டக்குழுவின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது. இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக புதுடில்லி வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நாளை திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற ஒரு வார காலத்திற்குள், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணமாக கருதப்படுகிறது. மேலும் மங்கள சமரவீர மற்றும் சுஷ்மா சுவராஜ் ...

மேலும் சில... »

சென்னை புத்தக கண்காட்சிக்கு 10 நாளில் 5 லட்சம் பேர் வருகை

16915de7-0dac-4a9c-bbfa-b75adef23aa1_S_secvpf.gif

சென்னை புத்தக கண்காட்சியை 10 நாளில் 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ‘ஆன்-லைன்’ வழியாகவும் புத்தகங்கள் வாங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 38-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் மைதானத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என பலதரப்பட்ட மொழி புத்தகங்களுடன் 700 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்களுடன் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு உள்ளூர்-வெளியூர், வெளிமாநில வாசகர்கள் வருகின்றனர். புத்தக கண்காட்சி குறித்து தென்னிந்திய ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus