Home » Indian News (page 5)

Indian News

ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை: காங். தலைவர்கள் திட்டவட்டம்

8adc7b4c-44d8-4efc-9584-377d66ac9c2a_S_secvpf.gif

ராகுல் காந்தி மீதான ஜெயந்தி நடராஜனின் குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக கூறி உள்ளனர். முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். தான் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பதவி வகித்தபோது, தனது துறையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலையீடு இருந்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். ராகுல் காந்தி மீதான ஜெயந்தி நடராஜனின் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் உறுதிபட மறுத்துள்ளனர். அது வருமாறு:- ஜெயந்தி ...

மேலும் சில... »

கர்நாடக அமைச்சர் ராஜினாமா விவகாரம்:மேலும் 7 அமைச்சர்கள் ராஜினாமா?

9

கர்நாடக கலால்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கடந்த 3 தினங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து மேலும் 7 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கலால்துறை அமைச்சர் சதீஸ் ஜார்கிஹோளி கடந்த 3 தினங்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வேறு கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு வந்த சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தே ச‌தீஷ் ஜார்கிஹோளி ராஜினாமா ...

மேலும் சில... »

குறிப்பிட்ட நிறுவனங்களின் கோப்புகள் மறு ஆய்வு செய்யப்படும் : ஜெயந்தி நடராஜன்

8

விதிமுறைகளை மீறி ஒப்புதல் கோரி விண்ணபித்தாக முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் குறிப்பிட்ட நிறுவனங்களின் கோப்புகள் மறு ஆய்வு செய்யப்படும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியிருந்த கடிதத்தில், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டியிருந்தார். அதானி குழுமம், வேதாந்தா நிறுவனம், நிர்மா நிறுவனம் என சில நிறுவனங்களின் பெயர்களையும் அக்கடிதத்தில் ...

மேலும் சில... »

சுற்றுச்சூழல் ஒப்புதல்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்: ஜேட்லி

7

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் சான்றிதழ்கள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தனக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்ததாக குற்றஞ்சாட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அருண் ஜேட்லி முந்தைய ஒப்புதல்களை வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மறு ஆய்வு செய்ய ...

மேலும் சில... »

சுனந்தா கொலை தொடர்பாக மகனிடம் விசாரணை: போலீசார் தகவல்

afb3e458-e4c2-4aad-b797-1f1a5b59690f_S_secvpf.gif

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது மகன் ஷிவ் மேனனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி, டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிணமாக கிடந்தார். இதை மர்ம மரணமாக முதலில் பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன் கொலை வழக்காக மாற்றினர். இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ...

மேலும் சில... »

ஐகோர்ட்டு தீர்ப்பு – சார்பு நீதிபதி பதவிக்கான தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே இடஒதுக்கீடு சலுகை

MadrasHigh Court1

சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வக்கீல் ஜெ.குமரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து, வக்கீலாக பணி செய்து வருகின்றேன். நான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன். இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்துக்கு, 8 சார்பு நீதிபதி பணியிடங்களுக்கு தகுந்த நபரிடம் இருந்து விண்ணப்பம் கோரி கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 23–ந் தேதி சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன். கலையரசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த 8 நீதிபதி பணியிடங்களுக்கு, 5 பணியிடங்கள் பொது ...

மேலும் சில... »

12 டாக்டர்களுக்கு ஐதராபாத்தில் பன்றி காய்ச்சல்

swine-flu1

ஐதராபாத், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே 32 பேர் பலியாகி இருந்தனர். நேற்று காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 58 மற்றும் 80 வயது பெண்கள் 2 பேர் பலியாகினார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் உஸ்மானியா மருத்துவமனையில் பன்றி ...

மேலும் சில... »

இன்று தியாகிகள் தினம் – ஜனாதிபதி, பிரதமர் மோடி மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு அஞ்சலி

washington2_650_093014090501

புதுடெல்லி, நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ராஜ்காட் வளாகத்தில் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டது. முன்னதாக காந்தி நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டரில் புகழ் அஞ்சலி செலுத்தினார். அதில் அவர், மரியாதைக்குரிய தந்தைக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த நாட்டுக்காக உயிர் நீத்த ...

மேலும் சில... »

உத்தரபிரதேசத்தில் பரபரப்பு – காவல் நிலையத்தில் 60 மண்டை ஓடுகள்

unnao_story_650_012915074459

லக்னோ: உ.பி.யில் பூட்டியிருந்த பழைய போலீஸ் நிலையத்தில் 60 மண்டை ஓடுகளும், எலும்பு கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னோ பகுதியில் உள்ள பழைய போலீஸ் நிலைய கட்டிடம் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் அப்பகுதியில் தோண்டி பார்த்தபோது 60 மனித மண்டை ஓடுகளும், எலும்பு கூடுகளும் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் கூறும்போது,‘இந்த மண்டை ஓடுகளும், எலும்பு கூடுகளும் இங்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட உடல்களை சேர்ந்தவைகள் என்று தெரிகிறது. அவைகள் போலீஸ் நிலைய மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. ...

மேலும் சில... »

குழந்தை தொழிலாளர்கள் ஆந்திராவில் 90 பேர் மீட்பு

Gwalior-metall-picking_20110226_2574

ஐதராபாத்: ஆந்திராவில் கொத்தடிமைகளாக வேலை செய்த 90 குழந்தைகளை ஐதராபாத் போலீசார் நேற்று மீட்டனர். இவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்த சிறுவர்கள். பீகார், உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த சிறுவர்கள் ஆந்திராவில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வருகின்றனர் எனவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆந்திர மாநில போலீசார் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமையன்று ஐதராபாத்தில் உள்ள பவானி நகரில் போலீசார் நடத்திய சோதனையில், தொழிற்சாலைகளில் வேலைபார்த்து வந்த ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus