Home » London News (page 2)

London News

தீவிரவாத ஆதரவு நாடு என விமர்சனம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் பங்குகளை கத்தார் வாங்கியது

119700

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கத்தார் ஏர்வேஸ் 1.15 பில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கியுள்ளது. இது குறித்து சர்வதேச விமான சங்கத்தின் (ஐஏஓ) தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ் கூறுகையில், கத்தார் பிரிட்டிஷ் ஏர்லைன்சுக்கு நீண்ட கால ஆதரவு தரும் பங்குதாரராக இருக்க வேண்டுமென்றும், உலகின் முன்னணி விமான அமைப்பான ஐஏஓ-வின் குறிக்கோளை முன்னெடுத்து செல்ல கத்தாருடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் ஏர்வேஸின் மிகப்பெரிய பங்குதாரராகியுள்ள கத்தாரால் இங்கிலாந்தின் தேச பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. ...

மேலும் சில... »

தந்தை மகளின் பிறந்தநாளுக்கு பாம்புகளை பரிசளித்தார்

red-black-and-white-snake

இங்கிலாந்தில் மகளின் பிறந்தநாளுக்கு தந்தை ஒருவர் பாம்புகளை பரிசாக அளிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. Nottingham நாட்டில் Farnsfield என்ற கிராமத்தில் வசிப்பவர் Daniel Orton(வயது 37). இவர் தனது 12 வயது மகளின் பிறந்தநாளுக்கு வினோதமாக பரிசளிக்க தீர்மானித்துள்ளார். அதற்காக, Wheelgate என்ற உயிரியல் பூங்காவிற்கு சென்றவர் அங்கு ஊர்ந்து சென்ற பாம்புகளை அவசர அவசரமாக பிடித்து தான் கொண்டு சென்ற பைகளுக்குள் தினித்துள்ளார். சுமார் 7 பாம்புகளை திருடிய அவரது நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக இருந்ததால் பூங்காவில் பணிபுரியும் நபர் அவரை பிடித்து ...

மேலும் சில... »

சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் நீண்ட இடைவெளிக்கு பிறகு செப்டம்பரில் வெளியாகிறது

sal_2364182b

இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாறு, மாயாஜாலம், காதல் உட்பட பல்வேறு சுவைகளுடன் கூடிய அந்த புத்தகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் 62 வயதான சல்மான் ருஷ்டி இதுவரை கிரீமஸ், ஷேம், த மூர்ஸ் லாஸ்ட் சிக் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மிட்நைட் சில்ட்ரன் என்ற நாவல் 1981-ம் ஆண்டு புக்கர் விருது பெற்றது. கடந்த 2008-ம் ...

மேலும் சில... »

48 மணி நேரத்தில் 46 லட்சம் நிதி உதவி – திருடனால் தாக்கப்பட்ட நபருக்கு பொதுமக்கள் உதவி

0871a369-cf8a-46ea-ba5e-40e6bbf55b21_S_secvpf

இங்கிலாந்தின் வடக்கு டினிசைட் கவுன்டியை சேர்ந்தவர் ஆலன் பர்னஸ். பார்வை மற்றும் வளர்ச்சி குறைபாடுடன் பிறந்தவர். நாலு அடி உயரமும் 38 கிலோ எடையும் கொண்ட இவர் கடந்த புதன்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபரால் தாக்கப்பட்டார். பணம் இருக்கும் என்று நினைத்து தாக்க ஆரம்பித்த திருடன் இவரது பாக்கெட்டில் பணம் இல்லாதது தெரிந்ததும் இவரை கிழே தள்ளிவிட்டு சென்றுள்ளான். இந்த தாக்குதலால் ஆலனின் கழுத்து எலும்பு உடைந்தது. கடும் வலியால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ...

மேலும் சில... »

ஹியூ ஸ்வைர் நம்பிக்கை – இலங்கையில் புதிய அரசின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும்

Hugo_Swire_visits_Japan

இலங்கையில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார். அவர், யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டு கொழும்பு திரும்பிய பின்னரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் பல்வேறு பரிமாணம் கொண்ட பிரச்சினைகளை நான் அறிந்துகொண்டேன். நல்லிணக்கம், பொறுப்புகூறல், இராணுவத்தின் வகிபாகம், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள், இலங்கைக்கு பிரித்தானியா உதவ கூடிய வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதலமைச்சருடன் பேசினேன். அது மட்டுமின்றி ...

மேலும் சில... »

பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு, புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை!

Britain's Prime Minister David Cameron speaks during a Cobra meeting at Number 10 Downing Street in London

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பதுடன், யாழ்.பொது நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் குறித்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக ஆளுநர் மாற்றம் மற்றும் பிரதம செயலாளர் மாற்றம் ஆகியவற்றை ...

மேலும் சில... »

பிரித்தானிய பிரதமர், இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை!

Cameron_2212748b

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இங்கு லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்ற சில வாரங்களில் இந்த ஒன்றுகூடல் நடந்திருக்கின்றது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமெரன், பிரித்தனைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் ...

மேலும் சில... »

இராணுவத்தினர் தமிழர்களின் காணிகளை விடுவித்தால் மீள்குடியேற்றத்துக்கு பிரிட்டன் உதவும்

stock-footage-uk-flag-flapping-in-wind-against-a-blue-sky

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டால், மீள்குடியேற்றத்துக்கான உதவிகளை வழங்கத் தயார் என பிரிட்டன் உறுதியளித்தது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் ஹுயோ ஸுவைர் மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன் கின் ஆகியோர் கொழும்பு – 3 இலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று விசேட சந்திப்பொன்றை சுமார் 45 நிமிடங்கள் நிமிடங்கள் நடத்தினர். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டது என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். ...

மேலும் சில... »

சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில்!

taraki-plote1

புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் சிறுபான்மைமக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ மெக்டொனாவ் குற்றம் சுமத்தியுள்ளார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள போதிலும், நூறு நாள் திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ...

மேலும் சில... »

இலங்கை ஜனாதிபதி மைத்ரியின் சர்ச்சைக்குரிய மகன் லண்டனுக்கு விமானம் ஏறினார்!

9002-lanka-20150128-1

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் மகன் தஹம் சிரிசேன, நேற்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் என்று தெரியவருகிறது. இலங்கை அரசியலில் கடந்த காலங்களில் உச்ச அதிகாரத்தில் இருந்தவர்கள் தமது வாரிசுகளை நாட்டில் வைத்திருந்தது பலவித சிக்கல்களை ஏற்படுத்தியது வரலாறு. இதில் இறுதி உதாரணமாக, முன்னாள் அதிபர்மகிந்த ராஜபக்ஷேவின் வாரிசுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள், மற்றும் குற்றச்சாட்டுகள் தற்போது அடிபடுகின்றன. நேற்று நாட்டை விட்டு வெளியேறிய தஹம் சிரிசேன, பிரிட்டனில் சட்டத்துறையில் மேற்படிப்பை மேற்கொள்வார் என தெரியவருகிறது. ஏற்கனவே பிரிட்டனில் இருந்த அவர், கடந்த நவம்பரில் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus