Home » News (page 431)

News

நாக தோஷம் உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு முறைகள்

Swamy Nagarajan

நாக தோஷம் இருப்பவர்களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான வழிபாடுகளும் பரிகாரங்களும் உள்ளன. 1. செல்வ செழிப்புக்கு – தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும். 2. கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு பெறுவதற்கு – பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்க வேண்டும். 3. உடல் நலம் பெற – உப்பு காணிக்கை செலுத்த வேண்டும். 4. விஷத்தன்மை நீங்கிட ...

மேலும் சில... »

கிரகஸ்தராக காட்சி தரும் அருள்மிகு ஆரியங்காவு ஐயப்பன் கோயில்

ayyappa-swamy-hd-wallpaper

சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார்.மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் செல்வர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே செல்லும் போது உடன் அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார். புஷ்கலா தன்னாலான கைங்கரியங்களைச் சாஸ்தாவுக்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே ...

மேலும் சில... »

போராடி வென்றது ஆஸ்திரேலியா – 5-வது ஒருநாள் போட்டி

Australia Cricket Team

தென் ஆப்ரிக்க அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதியது. நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்று முதலில் பேட் செய்த தென் ...

மேலும் சில... »

போலீசாரால் சுட்டுக்கொலை! பூங்காவிற்கு விளையாட சென்ற 12 வயது சிறுவன்

gun-firing

அமெரிக்காவிலன் கிளீவ்லாந்தில் 12 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், அங்கு கீழே இருந்த போலி துப்பாக்கி ஆயுதத்தை எடுத்து விளையாடி வந்துள்ளான். அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரி அந்த போலி துப்பாக்கியை தரும்படி சிறுவனிடம் கேட்டுள்ளார். அவன் தர மறுத்ததையடுத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுள்ளதாவது, போலீசார் துப்பாக்கியை அவனிடம் தரும்படி கேட்டுள்ளனர். பின்னர் கையை மேலே தூக்கி நிற்க சொல்லியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு ...

மேலும் சில... »

ஆஸ்திரேலியாவில் கேப்டன்ஷிப் சவாலை சந்திக்க தயார் – விராட் கோலி பேட்டி

PTI11_21_2012_000257B

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் கேப்டனாக செயல்பட உள்ள இந்திய வீரர் விராட் கோலி, சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 4–ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. விரல் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இந்திய கேப்டன் டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் விராட் கோலி பிரிஸ்பேன் டெஸ்டுக்கு கேப்டனாக செயல்பட ...

மேலும் சில... »

பிரான்சை வீழ்த்தி முதல் முறையாக சுவிட்சர்லாந்து டேவிஸ் கோப்பையை வென்றது

Image

பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப்போட்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள லில்லே நகரில் நடந்தது. முதல் நாளில் இரு அணிகளும் தலா ஒரு ஒற்றையரில் வெற்றி கண்ட நிலையில், 2–வது நாளில் இரட்டையரில் சுவிட்சர்லாந்தின் பெடரர்–வாவ்ரிங்கா ஜோடி வெற்றி பெற்று 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை சந்தித்தார். இதில் அனுபவம் வாய்ந்த 33 வயதான பெடரர் 6–4, ...

மேலும் சில... »

கார்த்திகைதீப திருவிழா உற்சவம் தொடங்கியது அருணாசலேஸ்வரர் கோவில் துர்க்கையம்மன் வீதிஉலா நடந்தது

annamalai2

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைதீப திருவிழா உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று துர்க்கை யம்மன் உற்சவம் நடந் தது. கார்த்திகைதீப திருவிழா திருவண்ணாமலை அரு ணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா ஒவ் வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 26–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங் குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. காலை யில் விநாயகர், சந்திர சேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலாவும் நடக் கிறது. தினமும் வெவ்வேறு ...

மேலும் சில... »

முரளிதியோரா திடீர் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

large_23888

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோலியம் மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக இருந்த முரளிதியோரா இன்று அதிகாலையில் திடீரென காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர், காங்., தலைவர் சோனியா, திக்விஜயசிங் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று பார்லி., குளிர் கால கூட்டத்தொடர் துவங்கவிருந்த நிலையில் இவர் காலமானதால் இரு அவைகளும் இவருக்கு இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது. நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக இவரது குடும்ப வட்டாரம் தெரிவிக்கிறது. முரளிதியோரா ( 77) மகாராஷ்ட்டிர மாநிலம் ...

மேலும் சில... »

எதிர்க்கட்சியினர் சதியை முறியடிப்பேன்

Mahinda-Rajapaksa20121-e1352854380972

எதிர்க்கட்சியினர் தனக்கு எதிராகப் பின்னும் சதிவேலையை முறியடிப்பேன் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கூறினார். இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பதவிக் காலம் இருந்தபோதிலும், முன்கூட்டியே அதிபர் தேர்தலை அறிவித்தார் ராஜபட்ச. மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார். இது ஒரு சாதனையாகும். புதிய அதிபருக்கான தேர்தல் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமைச்சரவையில் அவருக்கு அடுத்தபடியாக, இரண்டாம் இடத்தில் இருந்துவந்த மைத்ரிபால ஸ்ரீசேனா, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக அதிபர் பதவிக்குப் போட்டியிடப் ...

மேலும் சில... »

மிக வேகமாக வளர்ந்து வருகிறது பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் – அமெரிக்கா தகவல்

pakistan-rocket_2726300b

உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறிவருகிறது எனவும் 2020ம் ஆண்டுக்குள் இந்நாடு 200 அணு ஆயுதங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கூறும் போது உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 90 ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus