Home » News (page 460)

News

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 262 ரன்னில் ஆல்–அவுட்

15

அபுதாபி, பாகிஸ்தான்–நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 566 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் டாம் லதாம் மட்டும் நிலைத்து நின்றார். மற்ற வீரர்களில் கோரி ஆண்டர்சன் (48 ரன்), வாட்லிங் ...

மேலும் சில... »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து சென்னை–புனே அணிகள் இன்று பலப்பரீட்சை

14.1

புனே, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி–சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை–புனே மோதல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் புனேயில் இன்று ...

மேலும் சில... »

காவிரியின் குறுக்கே அணை – கர்நாடகாவுக்கு அனுமதி தர வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்

13

கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்டுவொம் என்று நேற்று பெங்களூருவில் கர்நாடகா அமைச்சர் பட்டீல் அறிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சில... »

காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் இந்தியா பதிலடி கொடுத்தது

12

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று காலை 8 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 குண்டுகள் அந்த இடத்தில் வந்து விழுந்தது. ஆனாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பதிலுக்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது. யூரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது கடந்த 3 நாளில் இது இரண்டாவது சம்பவமாகும். கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் ஒரு இந்திய வீரரும், ...

மேலும் சில... »

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது மத்திய அரசு அறிவிப்பு

rajini

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, கோவாவில், 45-வது சர்வதேச திரைப்பட விழா, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. 75 நாடுகள் இந்த விழா 11 நாட்கள் நடைபெறும். 75 நாடுகள், இதில் பங்கேற்கின்றன. ஆசிய நாடுகளின் 7 படங்களும், இதர நாடுகளின் 61 படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன. முதலாவது படமாக ஈரான் மொழிப்பட இயக்குனர் மோசன் மக்மல்பப் இயக்கிய ‘தி பிரசிடண்ட்’ என்ற படம் திரையிடப்படும். இந்த ஆண்டு மரணம் ...

மேலும் சில... »

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

bank_1_1185691g

புதுடெல்லி, நாடு முழுவதும் இன்று பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஊதிய உயர்வு நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்று கூறியது. இதனால், 12-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு ...

மேலும் சில... »

2021-ல் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பி வைக்கபடுவார்கள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்

9

2021-ம் ஆண்டு விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பி வைக்கபடுவார்கள் அதற்க்கான ஆயுத்த பணிகளை இஸ்ரோ ஆய்வு பணிகளை மேற்கொண்டுவருவதாக அதன் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; வரும் 2021-ம் ஆண்டு இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கபடுவார்கள். இந்திய நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கபட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க் என்ற ராக்கெட்டில் நமது விண்வெளி வீரர்கள் பயணம் செய்ய கூடிய வகையில் கேப்சூல் பரிசோதித்து இந்திய விஞ்ஞானிகள் பார்க்க உள்ளதாகவும், இந்த சோதனை வெற்றி அடைந்துவிட்ட பிறகு 2021-ம் ஆண்டு விண்வெளிக்கு இந்தியர்களை ...

மேலும் சில... »

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் நவ்பாரத் பவர் தனியார் நிறுவனத்தின் தொடர்பு குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

8

புதுடெல்லி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் நவ்பாரத் பவர் என்ற தனியார் நிறுவனத்தின் தொடர்பு குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்திடும்படி சிறப்பு நீதிமன்றம் இன்று சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில் வருகிற டிசம்பர் 16ந்தேதி அன்று சி.பி.ஐ.யானது வளர்ச்சி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி பாரத் பராஷர் உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டு பதிவு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அமைப்பானது, நவ்பாரத் பவர் தனியார் நிறுவனத்திற்கு எதிராகவும், அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை தலைவர் ஹரீஷ் சந்திர ...

மேலும் சில... »

டெல்லி பல்கலைக்கழக மாணவியை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய ஆராய்ச்சி அறிஞர்

7

புதுடெல்லி கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக உள்ளது. தொடர்ந்து பெண் குழந்தைகள் பள்ளிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிவருவது தொடர்ந்து செய்தியாக வந்து கொண்டு இருக்கிறது.டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 25 வயது பி.எச்டி  மாணவி ஒருவர் ஆராய்ச்சி அறிஞர் ஒருவரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். மேலும் ஆராய்ச்சி அறிஞர் இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என  மிரட்டல் விடுத்தும் உள்ளார். செவ்வாய்கிழமை பாதிக்கப்பட்ட பெண்  டெலிபோன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு ...

மேலும் சில... »

நேருவின் பிறந்தநாள் விழா: ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு

6

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் 125 வது பிறந்த நாள் விழாவை சர்வதேச மாநாடாக காங்கிரஸ் கொண்டாட திட்டமிட்டுள்ளது. நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தினம் நடக்கும் இந்த மாநாட்டில் நேருவின் மரபு மற்றும் உலகபார்வை  முன்னிலைப்படுத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும்  இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில்  உள்ள பல்வேறு அரசியல் கட்சியின்  பிரநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள அனைத்து தலைவர்களுக்கு அழைப்பு விடபட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். இந்தியாவின் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus