Home » Special News

Special News

அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு

tna-300x200

சிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது.இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப்புடன், நாளை கொழும்பு வரும் நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ...

மேலும் சில... »

தமிழக தொலைக்காட்சிகளுக்கு யாழில் இருந்த தடையை தற்போதைய அரசு நீக்கியது!

oYYBAFQTdO2Adq9TAABMnfyc2t8730 (1)

மஹிந்த அரசினால் தடைவிதிக்கப்பட்ட தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகள் மீண்டும் இலங்கையில் இயங்கத்தொடங்கியுள்ளது. இறுதி யுத்த அவலங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை அம்பலப்படுத்தி வந்திருந்த தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்படுத்துவதை இலங்கை அரசு தடுத்து வைத்திருந்தது. இத்தகைய தொலைகாட்சிகள் செய்மதி ஊடக இயக்கப்படுகின்றமையினால் அதனை பயன்படுத்தியும் உள்ளுர் முகவர்களை முடக்கியும் வட-கிழக்கு பகுதிகளில் மக்கள் தமிழக தொலைக்காட்சிகளினை பார்க்கவிடாது தடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையினில் தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து புதிய தலைமுறை மற்றும் மக்கள் தொலைக்காட்சி போன்றவை பார்வையிட இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

மேலும் சில... »

சிங்களவருக்கு சுதந்திரம் கொடுத்த தமிழருக்கு எப்போது கிடைக்கும் சுதந்திரம்

tamils-at-kadirgamh-camp-001-e1287407915713

புதிய ஜனாதிபதி தெரிவையடுத்து நாட்டில் புதிய அரசு அமையப்பெற்றதுமல்லாமல் பிராந்திய ஆட்சியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டின் அரசியலில் புதிய திருப்பத்துடன் மக்கள் மீதிருந்த சுமைகளும் குறையத் தொடங்கிவிட்டன, அதாவது தமிழர்கள் சிங்களவர்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்கிவிட்டார்கள் இனி தமிழர்களுக்கு எப்போது சுதந்திரம்? என்பது மட்டும் தான் மீதி என்ற நிலையே உள்ளது. இந்நிலையை ஏற்படுத்துவதற்கு முன்னர் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய அரசியற் பணியை தற்போதுள்ள அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டிய நிலையிலுள்ளனர். அதாவது சிங்கள மக்களுக்குள் ஆழவேரூட்டப்பட்டுள்ள பயங்கரவாதம் என்ற பீதி ...

மேலும் சில... »

உதவி இராஜாங்க செயலர் நிஷா இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

nisa

தெற்கு மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் அடுத்தவாரம் இரு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை வரும் உதவி இராஜாங்க செயலாளர் அரசிலுள்ள முக்கியஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் அடுத்தவாரம் இரு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை வரும் ...

மேலும் சில... »

பான் கீ மூன், ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை!

291023-ban-ki-moon

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் புதிதாக உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் பான் கீ மூன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைகளில் எவ்வாறு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜொவிக் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிபுணர்களின் ...

மேலும் சில... »

தலைமை நீதியரசரானர் ஷிராணி பண்டாரநாயக்கா – மீண்டும்

Shirani_Bandaranay_1306272f

குற்றஞ்சாட்டி பதவிநீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்கா, மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அதனையடுத்து பதவிகளை பொறுப்பேற்க உச்ச நீதிமன்றம் வந்த அவரை அங்கு கூடியிருந்த சட்டத்தரணிகள் வரவேற்றார்கள். அவர் தனது அலுவலகத்துக்கும் சென்றார். ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்ததற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவரது பதவி நீக்கம் செல்லுபடியாகாது என்றும், அதேவேளை மொஹான்பீரிஸ் அவர்கள் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டமை சட்ட விரோதமானது என்றும் மூத்த சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறினார். அதனால்தான் ஷிராணி ...

மேலும் சில... »

இலங்கை அகதிகளை படகில் தடுத்து வைத்தது சரியே

080712gencocos1_17vkcqk-17vkcqn

இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி வந்த 150க்கும் அதிகமானவர்களை கடலில் படகு ஒன்றில் தடுத்து வைத்திருந்தது சட்டப்படி சரியே என்று ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சுங்கப் பிரிவு கப்பல் ஒன்றால் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இவர்கள், சுமார் ஒரு மாதகாலம் படகு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த தீர்ப்பு ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கும், ஆஸ்திரேலிய மண்ணில் நல்ல வாழ்க்கையை தேடி படகில் வருபவர்களை தடுப்பதற்கான அதனது கொள்கைக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது. பசுபிக் தீவான நவுருவில் தற்போது ...

மேலும் சில... »

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் மாவை சந்தித்து பேச்சு

prison

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்க கோரி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு கோரிக்கை விடுத்­தி­ருந்த நிலையில் கூட்­ட­மைப்­பினர் தமிழ் அர­சியல் கைதி­களின் தகவல்களை திரட்டும் பணி­யினை ஆரம்­பித்­துள்­ளனர். நேற்று தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தமிழ் அர­சியல் கைதி­களை சந்­தித்­துள்ளார். இந்த வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்பின் போது அர­சியல் கைதி­களின் தக­வல்கள் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா நேற்று அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களை சந்­தித்­தி­ருந்தார். யுத்­த­கால கட்­டத்தில் கைது ...

மேலும் சில... »

ஒபாமா புது நம்பிக்கை இலங்கையில் மீண்டும் ஜனநாயகம்!

obama2

இலங்கையில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை போன்ற நாடுகளில் சிறப்பான எதிர்காலம் உருவாவதற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 66 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகைதந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது விஜயத்தின் இறுதி நாளான நேற்று செவ்வாய்க் கிழமை புதுடில்லி ஸ்ரீ போர்ட் அரங்கில் உரை நிழ்த்தும்போதே இவ்வாறு கூறியுள்ளதாக வெள்ளை மாளிகையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இம்முறை இடம்பெற்ற தேர்தல்கள் மூலமான அனுபவங்களைப் பயன்படுத்தி ஏனைய ...

மேலும் சில... »

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்கிறார்!

modi

இலங்கையின் புதிய அதிபராக மைத்திரிபால சிறீசேனா பதவியேற்ற பின் இந்தியாவுடனான நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலங்கை வெளியுறவு மந்திரி சமீபத்தில் தில்லி வந்தார். பிரதமர் மோடி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைத்தார். இலங்கையின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும் பிரதமர் மோடி எந்த தேதியில் இலங்கை சுற்றுப் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus