கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த நாள் தீபத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. “இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்” என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார். தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே ...
மேலும் சில... »Spiritual News
எமபயம் போக்கும் திருவிசநல்லூர் தலம்
ஸ்தலவரலாறு: பெண் பாவம் பொல்லாதது. அந்த பெண் பாவத்தைப் போக்கும் தலம் திருவிசநல்லூர் என்னும் திருவிசலூர். கணபதி என்னும் கேரள மன்னன் பல பெண்களை ஏமாற்றியும் வஞ்சித்தும் பாவச் செயல்களைச் செய்து வந்தான். பின்னாளில் தன் தவறை உணர்ந்து முனிவர் ஒருவரின் வழிகாட்டலால் திருவிசநல்லூர் வந்தான். அங்கு காவிரியில் நீராடி, திருவிசநல்லூர் ஈசனை வழிபட்டு, தன் பாவங்கள் நீங்கப் பெற்றான். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம்– பாவம் நீங்கும். இத்தல ஈசனின் ...
மேலும் சில... »கார்த்திகை மாத விரதங்கள்
கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. கார்த்திகைமாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்ன தானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை ...
மேலும் சில... »கிரிவலம் கிழமையும் – பலன்களும்
ஞாயிற்றுக்கிழமை : மனம், மொழி, மெய் சுத்தியுடன் நீராடி எந்த ஒரு சிந்தனையும் இன்றி நிர்மலமாய் மலையை வலம் வந்து தம்மால் இயன்ற தான தர்மங்களைச் செய்தவர்கள் சூரிய மண்டலத்தைப் பிளந்து சிவபதத்தைத் தமக்குரிய இடமாகச் சேர்த்துக் கொள்வர் என்று கூறப்படுகிறது. திங்கட்கிழமை : சூரியோதத்திற்கு முன்பாக நீராடி ஈர உடையுடன் இம்மலையை வலம் வருவதால் தேவேந்திரனைப் போன்று ஏழு உலகினையும் ஆளும் பலனை அடையலாம். செவ்வாய்க்கிழமை : தூய நீரால் நீராடி எவருடனும் எதுவும் வாய் பேசிடாமல் தம் சித்தத்தை சிவத்தினடத்தே வைத்து ...
மேலும் சில... »திருக்கார்த்திகை பாடல்
கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றும் போது பாட வேண்டிய பாடல். பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக! முழு ஞானப் பெருக்கே வருக! பிறை மவுலிப் பெம்மான் முக்கண்சுடர்க்கு நல் விருந்தே வருக! முழு முதற்கும் வித்தே வருக! வித்தின்றி விளைந்த பரமானந்தத்தின் விளையே வருக! பழுளையின் குருந்தே வருக! அருள்பழுத்த கொம்பே வருக! திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெரு வெள்ளம் பிடைவார் பிறவி பிணிக்கோர் மருந்தே வருக! பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக! மலையத்துவசன் பெற்ற பெரு வாழ்வே வருக வருகவே! மீனாட்சியம்மை பிள்ளைத் ...
மேலும் சில... »பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். பதினாறு பேறுகள் கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற ...
மேலும் சில... »செல்வம் தரும் திருமகள்-மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்
காக்கும் கடவுளான ஸ்ரீமன் நாரயணனின் இதயத்தில் வாசம் செய்பவள் அவரது மனைவி மகாலட்சுமி. ஸ்ரீ என்றும், திருமகள் என்றும் அழைக்கப்படும் லட்சுமியின் அருள் கடாட்சம் கிடைத்தால் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் அஷ்டலட்சுமிகளும் தாண்டவமாடவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். மகாலட்சுமி எங்கே நிலையாக தங்குகிறாள் என்று தர்மசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து வாசலில் அரிசி மாவினால் கோலமிட்டு வீட்டில் விளக்கேற்ற வேண்டும். தூய்மையையும், தர்மத்தையும், பின்பற்ற வேண்டும். தாய் தந்தையரை வணங்கி அவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும். வீட்டுப்பாத்திரங்களை தூய்மையாகவும், ...
மேலும் சில... »வேப்ப மரத்தினடியில் சுயம்புவாய் அவதரித்த அம்மன்
சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ளது ரேணுகா வேம்புலி அம்மன் ஆலயம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ரேணுகா பரமேஸ்வரியான அம்பிகை வேப்ப மரத்தினடியில் சுயம்புவாய் அவதரித்தாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவளுக்கு அபிஷேகம் செய்த நீரை தம் உடலில் தடவிக் கொண்டு நலம் அடைகின்றனர்.ஆடி மாதம் கடைசி பத்து நாட்கள் இங்கு விமரிசையாக திருவிழா நடக்கிறது. பத்தாம் நாள் தீமிதி உற்சவம்.
மேலும் சில... »தியானலிங்கம்: வெளிச்சம் வருகிறது – 2
சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ளது ரேணுகா வேம்புலி அம்மன் ஆலயம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ரேணுகா பரமேஸ்வரியான அம்பிகை வேப்ப மரத்தினடியில் சுயம்புவாய் அவதரித்தாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவளுக்கு அபிஷேகம் செய்த நீரை தம் உடலில் தடவிக் கொண்டு நலம் அடைகின்றனர்.ஆடி மாதம் கடைசி பத்து நாட்கள் இங்கு விமரிசையாக திருவிழா நடக்கிறது. பத்தாம் நாள் தீமிதி உற்சவம்.
மேலும் சில... »மயிலை நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா
சென்னை: லஸ் சர்ச் சாலை நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா ஒரு வாரம் நடக்கிறது. மயிலாப்பூர்,லஸ் சர்ச் சாலை சந்திப்பில் உள்ள ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் 17ம் தேதி காலை அபிஷேக ஆராதனையுடன் திருவிழா தொடங்குகிறது. இந்த விழா 23ம் தேதி வரை நடைபெறுகிறது.ஒவ்வொரு நாளும் காலை அபிஷேகமும், மாலையில் தீப ஆராதனையும் நடைபெறுகிறது. 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 23ம் தேதி இரவு 9 மணிக்கு நவசக்தி விநாயகர் ...
மேலும் சில... »