Home » Sports News

Sports News

கிரிக்கெட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டும்

16

உலகக்கோப்பைக்கு முன்பு கிடைக்கும் இடைவெளி நாட்களை முழு ஓய்வுக்குப் பயன்படுத்துவதே அணியின் மேம்பாட்டுக்குச் சிறந்தது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணிக்கு இப்போது தேவை உலகக்கோப்பைக்கு முன்பு சிறிது ஓய்வு என்று தோனி தெரிவித்துள்ளார். “இந்தத் தொடர் மிகவும் நீண்ட தொடராகிவிட்டது. இந்த 6 முதல் 10 நாட்களான இடைவெளி அணிக்கு உதவிகரமாக அமையும் என்று கருதுகிறேன். கிரிக்கேட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டியதுதான். கண்ணில் படாத இடத்தில் ...

மேலும் சில... »

பயஸ் – ஹிங்கிஸ் இணை சாம்பியன்

15

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் – சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், இந்தியாவின் 41 வயது மூத்த நட்சத்திர வீரரான லியாண்டர் பயஸ் தனது 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வசப்படுத்தினார். அதேபோல், ஹிங்கிஸுக்கும் 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது மற்றொரு சுவாரசிய அம்சம். பயஸ் – ஹிங்கிஸ் இணை தன் இறுதிச் சுற்றில், ஃபிரான்ஸின் கிறிஸ்டினா மிளாண்டெனோவிக் – கனடாவின் டேனியஸ் நெஸ்டர் இணையை எதிர்கொண்டது. ...

மேலும் சில... »

முர்ரேவை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

14

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றைய பிரிவில், ஆண்டி முர்ரேவை வீழ்த்தி, நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரேவுடன் கடுமையாக மோதினார். இப்போட்டியில், ஜோகோவிச் 7-6, 6-7, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் முர்ரேவை வீழ்த்தி, ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 5-வது முறையாக கைப்பற்றினார். ஜோகோவிச்சுக்கு முதல் செட்டில் கடும் நெருக்கடி தந்த முர்ரே இரண்டாவது செட்டை அசத்தலாக கைப்பற்றினார். எனினும், அடுத்தடுத்த செட்களில் ...

மேலும் சில... »

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. சாம்பியன்

13

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. பெர்த்தில் நடந்து முடிந்த இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. இப்போட்டியில் 279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 39.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் சுருண்டு தோல்வி கண்டது. அந்த அணியில் போபரா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். மொயீன் அலி 26 ரன்களையும், ரூட் 25 ரன்களையும் எடுத்தனர். பிராட் 24 ரன்களையும், ...

மேலும் சில... »

ஹாக்கி இந்தியா லீக் – டெல்லி அணியின் கேப்டன் சர்தார் சிங் சஸ்பெண்ட்

article-2501231-195A754A00000578-925_306x469

ஹாக்கி இந்தியா லீக் போட்டியின்போது, எதிரணி வீரரிடம் கடுமையாக நடந்துகொண்டதற்காக டெல்லி அணியின் கேப்டன் சர்தார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் பஞ்சாப் வாரியர்ஸ் அணியுடன் டெல்லி வேவ்ரைடர்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் எதிரணி வீரர் ஒருவரிடம் சர்தார் சிங் கடுமையாக நடந்துகொண்டார். இதுகுறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று விசாரணை நடத்தியது. வீடியோ பதிவிலும் சர்தார் சிங் விதிமுறையை மீறியது தெரியவந்தது. இதுகுறித்து சர்தார் சிங்கிடம் கேட்டபோது, அவரும் தனது தவறை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் ...

மேலும் சில... »

உலக கோப்பையை வெல்லாமல் போன 12 தலைசிறந்த வீரர்கள் – இன்ஜமாம் கணிப்பு

inzamam300

1992-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தவரும், அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக், ஐ.சி.சி. இணைய தளத்தில் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போன தலைசிறந்த 12 வீரர்களின் பட்டியலை பதிவு செய்துள்ளார். கிரிக்கெட் ஆட்டத்தில் பல்வேறு கட்டங்களில் அருமையாக ஜொலித்த அவர்களால் அதிர்ஷ்டம் இல்லாததால் உலக கோப்பையை கையில் ஏந்த முடியாத துரதிருஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார். இன்ஜமாம் தெரிவித்துள்ள திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத வீரர்களின் பட்டியலில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், ...

மேலும் சில... »

டெஸ்ட் போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு

958c3840-04b8-4807-927b-d552f91f9aec_S_secvpf.gif

வெஸ்ட் இண்ட்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010–ம் ஆண்டில் இருந்து அவர் டெஸ்ட்டில் ஆடவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். பிராவோ 40 டெஸ்டில், 2200 ரன் எடுத்துள்ளார். 3 சதம் அடங்கும். சராசரி 31.42 ஆகும். 80 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

மேலும் சில... »

மோசமான ஆட்டம் பேட்ஸ்மேன்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல

f2b93230-34d2-4e1c-8173-da1ef6a88873_S_secvpf.gif

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகுந்த ஏமாற்றம் அளித்தது. ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் போனது பரிதாபமே. 4 டெஸ்ட் கொண்ட தொடரில் 2 டெஸ்டில் தோற்றது. 2 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதே போல் 3 நாடுகள் போட்டியிலும் வெற்றி கிடைக்கவில்லை. 3 ஆட்டத்திலும் தோற்றது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணணையாளருமான கவாஸ்கர் கடுமையாக பாய்ந்து உள்ளார். அவர் கூறும் போது, பேட்ஸ் மேன்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியது. போராடும் மனநிலையில் ஆடவில்லை. தப்பித்துக் ...

மேலும் சில... »

சரத்பவார் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டி

article-2465461-18CE3C9900000578-841_306x423

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது கிரிக்கெட் வாரிய தேர்தலை 6 வாரங்களுக்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. என்.சீனிவாசனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஐ.பி.எல். அணியா? கிரிக்கெட் வாரியமா? இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரியான சரத்பவார் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் பங்கேற்று போட்டியிடுகிறார். ...

மேலும் சில... »

ஆஸ்திரேலிய ஓபன்: 19வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ்

2e053138-b5c7-4580-ae72-7fc709e30249_S_secvpf.gif

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் சிலாம் போட்டிகளில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார். தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், இரண்டாவது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் செரீனா கைப்பற்றினார். எனினும் இரண்டாவது செட்டை கைப்பற்ற ஷரபோவா கடினமாக போராடினார். இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில் 6-6 என்ற புள்ளியில் இருவரும் சம நிலையில் இருந்தனர். இதனால் டை ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus