பிணைக் கைதியாக வைத்திருந்த இரண்டாவது ஜப்பானியர் கென்ஜி கோட்டோவில் தலையை ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்தனர். இது முழுக்க முழுக்க குரூரமானது என்றும், மன்னிக்க முடியாத தீவிரவாத செயல் என்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார். இராக் மற்றும் சிரியாவின் குறிப்பிட்ட பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ளனர். இராக் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வந்த அவர்களை பன்னாட்டு ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் அவர்களின் முகாம்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ...
மேலும் சில... »World News
இலங்கை தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு
இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கனகசபாபதி ஸ்ரீபவன் (62) பதவியேற்றுக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிரானி பண்டாரநாயக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய முன்னாள் அதிபர் ராஜபக்ச, அவரை பதவிநீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து மொகான் பெரீஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ராஜபக்ச 3-வது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தது இவர்தான். இந்நிலையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் ...
மேலும் சில... »ஏர் ஏசியா விமானம் விபத்து
ஏர் ஏசியா விமானம் 162 பயணி களுடன் கடலில் மூழ்கி விபத்துக் குள்ளானபோது, அதன் கேப்டன் இருக்கையில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏர் ஏசியா ஜெட் விமானம் கடந்த டிசம்பர் 28-ம் தேதி இந்தோனே சியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பியது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஊழியர்கள் உட்பட 162 பயணிகள் பரிதாபமாக உயிரி ழந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ‘விமானம் ...
மேலும் சில... »கலீதா ஜியா வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு
வங்கதேசத்தில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க் கட்சிகள் காலவரையற்ற வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போராட்டத்தை வங்கதேச தேசிய கட்சி முன்னின்று நடத்தி வருகிறது. வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலீதா ஜியா தற்போது அலுவலகத்தை வீடாக மாற்றி பயன்படுத்தி வருகிறார். வேலைநிறுத்தப் போராட் டத்தை வாபஸ் பெற வேண்டும், இல்லையெனில் கடும் விளைவு களை சந்திக்க நேரிடும் என்று வங்கதேச அரசு கலீதா ஜியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ...
மேலும் சில... »நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர ஏனையவற்றில் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்… அமெரிக்காவில்
அமெரிக்க ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர, ஏனைய ரக ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க கலிபோர்னியா பிராந்தியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஆப்பிள், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கெரமல் ஆப்பிள், கிரேன் ஸ்மித் ஆப்பிள் மற்றும் காலா வகையான ஆப்பிள்களை விற்பனை செய்வதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற ஆப்பிள்களில் பக்றீரியா தொற்று காணப்படுவதாக ...
மேலும் சில... »பயங்கரவாத செயற்பாட்டை மேற்கொள்ளும்படி தூண்டும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை?, கனடாவில் வரவுள்ள புதிய சட்டம்!
கனடாவில் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் ஒன்றின் கீழ் பயங்கரவாத செயற்பாடு ஒன்றை மேற்கொள்ளும்படி தூண்டும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். கனடாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில் சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டத்திற்கான வரைவொன்றை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டவிதிகள் கனேடிய புலனாய்வுச் சேவையினருக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்குகின்றன. சந்தேகத்துக்கிடமான தீவிரவாத போக்குடையவர்களின் பயணத் திட்டங்கள், வங்கிக் கொடுப்பனவுகள், அடிப்படைவாத போக்குடைய இணையத்தளங்கள் என்பவற்றுக்கு எதிராக புலனாய்வு சேவையினர் ...
மேலும் சில... »சீன 6 அம்ச திட்டம் உறவு மேம்பட
சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய-சீன மீடியாக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இரு நாட்டு உறவுகளும் மேம்பட, ஆறு அம்சங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். செயல்பாடுடன் கூடிய அணுகுமுறை, வௌிப்படையான பேச்சுவார்த்தை. பொதுத்தன்மை, மண்டல ரீதியான வளர்ச்சி திட்டங்களில் உடன்பாடு, தகவல் தொடர்பு விரிவாக்கம். ஏசியான் நாடுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது, என்றார்.
மேலும் சில... »நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான போக்ராவில் சனிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாள நேரப்படி இரவு 7.44 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் போது, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினர்.
மேலும் சில... »ஜெப் புஷ் போட்டியிட வாய்ப்பு அதிகரிப்பு – அமெரிக்க அதிபர் தேர்தல்
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் தம்பியுமான ஜெப் புஷ் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் மிட் ராம்னி போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் போட்டியிடப் போவதில்லை என வியாழக்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜெப் புஷ் (61) வேட்பாளராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், குடியரசுக் கட்சி சார்பில் ஏற்கெனவே சிலரின் பெயர்கள் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்திய ...
மேலும் சில... »நாசா பூமியை கண்காணிக்கும் புதிய செயற்கைகோள் அனுப்பியது
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பூமியை ஆய்வு செய்து கண்காணிக்கும் வகையில் புதிய செயற்கைகோளை நேற்று விண்ணில் செலுத்தியது. அதன் பெயர் எஸ்.ஏ.எம்.பி. (‘சாயல் மாய்ஸ்சர் ஆக்டிவ் பேசிவ்’) என்பதாகும். இந்த ராக்கெட் பூமியின் மேற்பரப்பில் நிலவும் தட்ப வெப்ப நிலை, சுற்றுச்சூழல் மற்றும் பூமியின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அதன்மூலம் ஏற்பட போகும் வெள்ளம் மற்றும் வறட்சியை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். இந்த ‘எஸ்.ஏ.எம்.பி.’ செயற்கைகோள் டெல்டா–2 ராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் உள்ள வான்டன்பெர்க் விமான படை தளத்தில் இருந்து ...
மேலும் சில... »