Home » World News (page 10)

World News

மான்செஸ்டரில் 97 கி.மீ. வேகத்தில் காற்று வீசியபோது போராடி தரையிறங்கிய விமானம்

226254d2-13c8-479d-8de2-f0185865de1d_S_secvpf.gif

அமெரிக்காவின் மான்செஸ்டர் கவுன்டியில் கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் காற்று வீசி வருகிறது. இந்த மோசமான வானிலை நிலவுவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ380 விமானம், நேற்று மதியம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் மணிக்கு 97 கி.மீ. வேகத்தில் வீசும் சூறாவளிக்காற்றை சமாளித்து தரை இறங்குவதற்காக போராடியது. இந்த போராட்டத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவைப் பார்க்கும் போது விமானம் வெடித்து விடுமோ என்ற பதட்டத்தை உருவாக்கும் அளவிற்கு காற்றின் ...

மேலும் சில... »

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளான போது அதை துணை விமானியே இயக்கினார்: விசாரணையில் தகவல்

fa18f9ae-892b-46d4-a09c-dc7714327063_S_secvpf.gif

இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து கடந்த டிசம்பர் 28-ந்தேதி சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இதையடுத்து பல்வேறு தொழில் நுட்பக்கருவிகள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் பலியானவர்களின் உடல்களையும், விமானத்தையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விமானம் விழுந்த இடத்திலிருந்து 1000 கி.மீ தொலைவில் இந்தோனேசியாவின் மையப்பகுதியில் உள்ள சுலவேசி தீவில் மீனவர்கள் மேலும் இருவரின் உடல்களை மீட்டனர். இதுவரை நடந்த தேடுதல் வேட்டையில் 72 ...

மேலும் சில... »

பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு

பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண் வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம் கண்டு பிடித்தது. அது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதையடுத்து, அந்த மண்டலத்தில் சூரியன் போன்று புதிய நட்சத்திரம் உள்ளது. அதற்கு கெப்லர் ...

மேலும் சில... »

மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணி கைவிடப்பட்டது : 239 பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு

0ede53a8-238f-4fea-a273-097acb9fcef9_S_secvpf.gif

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற எம்.எச்.370 பயணிகள் விமானம் ரேடார் சிக்னலிலிருந்து மறைந்தது. 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து  இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன. இருந்தும் விமானத்தின் உதிரிபாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விமானத்தை தேடும் ...

மேலும் சில... »

பாகிஸ்தானில் கவர்னர் ராஜினாமா:நவாஸ் ஷெரீப் அரசை விமர்சித்ததால் சர்ச்சை

b14b3350-098a-4fad-bdbc-ff4fc67763ba_S_secvpf.gif

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் கவர்னராக சவுத்ரி முகமது சர்வார் பதவி வகித்து வந்தார். அவர் அமெரிக்காவுடன், இந்தியா கூட்டாளித்துவ ஒப்பந்தங்கள் செய்தது போன்று, பாகிஸ்தான் செய்ய தவறி விட்டது என கூறி, நவாஸ் ஷெரீப் அரசை விமர்சித்தார். இது தொடர்பாக, ஒரு விழாவில் அவர் பேசும்போது, “அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வந்ததும், அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பாகிஸ்தானுக்கு ராஜ்யரீதியிலான தோல்வியாக அமைந்து விட்டது” என கூறினார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ...

மேலும் சில... »

புத்த துறவியின் ‘மம்மி’

26

உலன் படோர்: மங்கோலியா நாட்டில் ‘மம்மி’ முறையில் பாதுகாக்கப்பட்ட புத்த துறவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோகாசனம் செய்தபடி உயிர்நீத்த அந்த துறவியின் உடல் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. திபெத்திய புத்த துறவிகளிடையே இதுபோல் யோக நிலையில் தியானம் செய்தபடி உயிர் துறக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்ததால், இந்த துறவியும் திபெத்திய லாமாவின் சீடராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கால்நடையின் தோலால் சுற்றி ‘மம்மி’ முறையில் பாதுகாக்கப்பட்டிருந்த இந்த உடல் எத்தனை ஆண்டு காலம் பழமையானது? என்பதை கண்டுபிடிக்கும் ...

மேலும் சில... »

பாகிஸ்தானில் திருமணத்துக்கு மறுத்த பெண் தீ வைத்து எரிப்பு

27

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திருமணத்துக்கு மறுத்த 18 வயது பெண்ணை துணி வியாபாரி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தினார்.  இதில் அந்த பெண் பரிதாபமாக பலியானார்.  இதைத் தொடர்ந்து, அந்த துணி வியாபாரியை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானில் சிந்து பிராந்தியத்தில்  நவ்சாரோ பெரோஸ் மாவட்டத்தில் 18 வயதான ஒரு பெண், தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தாள். அவர்களது வீடு அருகே சாஜித்  குரேஷி  என்ற துணி வியாபாரி குடியிருந்தார். பக்கத்து வீட்டில் குடியிருந்த 18 வயதான பெண்ணை திருமணம் செய்ய ...

மேலும் சில... »

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம்

6

மத்திய வெளியுறத்துறை செயலாளர் சுஜாதா சிங் ராஜினமா செய்ததை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் புதிய வெளியுறத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை பதவியேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இருந்து வந்த சுஜாதா சிங் பதவி காலம் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில... »

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானுக்கான புதிய தலைவரை நியமித்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்

5

எகிப்து தீவிரவாதி ஐமன் அல் ஜவாஹிரியின் தலைமையில் இயங்கிவரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்தில் இருந்து விலகிய ஏராளமானோர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தில் இருந்து விலகுவதாக அவ்வியக்கத்தின் ஓரக்சாய் பகுதி செய்தி தொடர்பாளரான ஹபீஸ் சயீத் கான் என்பவர் அறிவித்திருந்தார். அவரோடு மேலும் பலரும் தலிபான் இயக்கத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், ஹபீஸ் சயீத் கானை குராசான் (ஆப்கானிஸ்தான், ...

மேலும் சில... »

ஹெஸ்புல்லா இயக்கத்தினரின் ஏவுகணை தாக்குதலுக்கு 2 இஸ்ரேல் வீரர்கள் பலி

4

இஸ்ரேல் ராணுவப்படைகளின் வாகன அணிவகுப்பின் மீது இன்று ஹெஸ்புல்லா போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவர் பலியாகினர். ஏழு வீரர்கள் படுகாயமடைந்தனர். ஹெஸ்புல்லா போராளிகளின் இந்த தாக்குதலுக்கு மூர்க்கத்தனமாக பதிலடி தரப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்தார். இதனையடுத்து, இஸ்ரேல் விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஹெஸ்புல்லா இயக்கத்தினரின் முகாம்களின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஆவேச தாக்குதல் நடத்தின. இதில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus