Home » World News (page 102)

World News

அமெரிக்க விமானத்திற்குள் அல்கொய்தா வை-பை நெட்வொர்க்!

wifi network amerika

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து லண்டனம் புறப்பட்ட விமானத்தில்அல்கொய்தா பெயரில் வை-பை நெட்வொர்க் இருப்பது தெரியவந்ததால் அந்த விமானமே ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகியுள்ளது. அப்போது பயணி ஒருவர் தனது செல்போன் வை-பையை ஆன் செய்துள்ளார்.  அந்த பகுதியில் எந்தெந்த வை-பை நெட்வொர்க்குகள் இருக்குமோ அவையெல்லாம் மொபைல் திரையில் தென்பட்டுள்ளன. அதில் ஒரு நெட்வொர்க் பெயர் ‘அல்கொய்தா ஃப்ரீ டெரர் நெட்வொர்க்’ என்று இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அந்த ...

மேலும் சில... »

நாசாவால் செலுத்தப்பட்ட ராக்கெட் வெடித்துச் சிதறியது

Nasa Rocket

விண்வெளிக்கு பொருட்களை கொண்டு செல்ல நாசாவால் செலுத்தப்பட்ட ராக்கெட் சில நொடிகளிலே வெடித்துச் சிதறியது. விர்ஜினியா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு தேவையான சரக்குகளை கொண்டு செல்ல ஆளில்லா ராக்கெட் ஒன்று மாலை 6. 22 மணி அளவில் செலுத்தப்பட்டது. செலுத்தப்பட்ட 6 நொடிகளிலேயே ராக்கெட் வெடித்து சிதறியது. இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் வெடித்ததால் ஏற்பட்ட இழப்புகளை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிபர் ஒபாமாவுக்கு விவரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் சில... »

சீனா சென்ற ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

நான்கு நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்ற ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனா தலைநகர் பெய்ஜிங் சென்ற அவரை சீன அதிபர் ஜின்பிங், வரவேற்றார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு சீனா நாடு சார்பில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் சீனாவின் மிகப் பெரிய டைனாமென் சதுக்கத்தை பார்வையிட்டனர். பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தக ஒத்துழைப்பு, தொழில்நுட்ப உதவி, உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும் சில... »

லண்டனில் ஹாரி பாட்டர் கதை சித்திரத்தின் பின்னணியிலான விடுதி

harry

லண்டனில் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதை சித்திரத்தின் பின்னணியிலான விடுதி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்த விடுதியில் அமைக்கப்பட்ட அறைகளில் ஹாரிபாட்டர் சித்திரத்தில் உள்ள மாயாஜால பள்ளிகளை போலவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள படுக்கை அறையில் ஹாரி பாட்டர் புத்தக்கத்தில் வருவது போலவே விஷ பாட்டில்கள், மெழுகுவர்த்திகள், மத்திர கோல்கள் இடம்பெற்றுள்ளன. ஹாரிபாட்டர் கதையில் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதால் தான் இந்த விடுதி உருவாக்கப்பட்டதாக இதன் உரிமையாளர் தெரிவித்தார். இதேபோல் இந்த விடுதி நிர்வாகம் சார்பபில் ஹாரிபாட்டார் சிறப்பு பேருந்து சுற்றுலா பயணமும் அழைத்து ...

மேலும் சில... »

துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் மண் சரிவு ; மீட்பு பணி தீவிரம்

turkey

துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தெற்கு துருக்கியின் கரமான் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மீட்புபடையினர் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 25 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் எஞ்சியுள்ள 19 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவுக்கு வெள்ள நீர் சுரங்கத்திற்குள் புகுந்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சில... »

முதலாம் உலகப் போரின் நியூபர்ட் நகரத்தை மீட்ட நிகழ்வின் 100வது ஆண்டு தினம்

belgiam

முதலாம் உலகப் போரின் நியூபர்ட் நகரத்தை ஜெர்மனியிடமிருந்து மீட்ட நிகழ்வின் 100வது ஆண்டு தினம் பெல்ஜியத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஜெர்மனிய அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் மற்றும் நெதர்லாந்து இளவரசி பீட்ரிக்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும் பெல்ஜிய அரசர் பிலிப், ராணி மதைல்டே ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜெர்மனியை தடுக்க, வேண்டுமென்றே வெள்ளப்பெருக்கு உருவாக்கப்பட்ட நியூபூர்ட் பகுதியில் இந்த விழா நடைபெற்றது. இதில் பேசிய பெல்ஜிய ...

மேலும் சில... »

டென்மார்க்கில் பருவகால மாற்றங்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது

climate_change

டென்மார்க்கில் நடைபெற்ற பருவகால மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கோபன்ஹெகனில் நடந்த மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அறிவியலாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் உலகில் தற்போது ஏற்பட்டுள்ள பருவகால மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சர்வதேச வானிலை ஆய்வு மையத்தால் கடந்த 1988 ஆம் ஆண்டு ஐபிசிசி அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகளாவிய அளவில் ஏற்படும் பருவகால மாற்றங்களை அறிவியல் பூர்வமாக ...

மேலும் சில... »

இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு: இலங்கை கடற்படை தளபதி

இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு

இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு என்று இலங்கை கடற்படை தளபதி ஜயந்த பெரேரா கூறியுள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுடன் இலங்கை நல்ல நட்புறவுடன் உள்ளது. கடற்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு குறைபாட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் பாதுகாப்பு. சீனா மட்டுமல்லாது ரஷ்யாவுடனும், இலங்கை நட்புறவுடனே இருக்கிறது. இது வர்த்தக ரீதியான நட்பு மட்டுமே தவிர எந்தவித இராணுவ உடன்பாடும் இல்லை என்றார். இந்திய கடற்படை தளபதியின் அழைப்பை ஏற்று, ...

மேலும் சில... »

வைக்கோல் பட்டடைகளை இரும்புப் பட்டறைகளாக மாற்றாதீர்கள்- நாடாளுமன்றத்தில் சிறீதரன்

நாடாளுமன்றத்தில் சிறீதரன்

இலங்கையில் தமிழ் மக்கள் ஈழம் என்ற தனி நாட்டை நோக்கி தள்ளப்படாமல் இருக்க அவர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்கள் தனியான தமிழ் நாட்டுக்காக அழுத்தங்களை கொடுக்கவில்லை எனவும் அவர்கள் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்கே அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மாத்திரம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது எனவும் ...

மேலும் சில... »

மஹிந்தவின் நகை கையளிப்பின் பின்னணியில் ஐ.நா விசாரணைக் குழு?

பின்னணியில் ஐ.நா விசாரணைக் குழு?

அண்மையில் மகிந்த மேற்கொண்ட வடக்கின் வசந்தம் விஜயத்தின்போது, விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய நகைகளை மீளளித்ததமை மிகவும் ஒரு சந்தேகத்திற்குரிய விடயம். ஐ.நா.வின் மனிதவுரிமைக் கவுன்சிலின் விசாரணைக்கு முன்பாக இந்ந நகைகள் கையளிக்கப்பட்டமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்வில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், அந்தக் குழுவின் ஆளுமைக்கு அப்பாற்பட்ட விடயங்களையும் தருஸ்மன் குழு பரிந்துரைகளாக இணைத்திருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளையும் ஐ.நா.மனிதவுரிமைக் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus