Home » World News (page 2)

World News

சிம்பாப்வே அதிபர் முகாபே ஆப்பிரிக்க யூனியனின் புதிய சேர்மேனாக நியமனம்!

mugabe

54 ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ஆப்பிரிக்க யூனியனின் புதிய சேர்மேன் பதவிக்கு சிம்பாப்வேயின் தற்போதைய அதிபர் ரோபெர்ட் முகாபே ஐ வெள்ளிக்கிழமை ஆப்பிரிக்கத் தலைவர்கள் நியமித்துள்ளனர். இதன் மூலம் ஆப்பிரிக்க யூனியனின் முன்னால் சேர்மேனான மௌரிட்டானியாவின் அதிபர் மொஹம்மெட் ஔல்ட் அப்டெல் அஷிஷ் இனது இடத்தை 1980 ஆம் ஆண்டு முதல் சிம்பாப்வேயை ஆண்டு வரும் 90 வயது முகாபே நிரப்புகின்றார். எத்தியோப்பியாவின் தலைநகரிலுள்ள ஆப்பிரிக்க யூனியன் தலைமையகத்தில் இரு நாட்களாக அவ்வமைப்பின் முக்கிய தலைவர்கள் இணைந்து பங்குபற்றிய மாநாட்டின் போது புதிய சேர்மேன் ...

மேலும் சில... »

ஒபாமா மற்றும் தலாய்லாமா அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்வில் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ளனர்!

51746d0cfa_usa-obama-dalai-lama-usa01

அமெரிக்காவில் அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஒபாமாவும் திபேத்தின் ஆன்மிகத் தலைவருமான தலாய் லாமாவும் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவும் தலாய்லாமாவும் மேற்கொண்டிருந்த சந்திப்பு சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில் மறுபடி இவர்கள் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதான நிகழ்வும் நிச்சயம் சீன அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்யும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். எதிர்வரும் பெப்ரவரி 5 ...

மேலும் சில... »

ஆணாக இருந்து பெண்ணாக உருமாறும் முன்னாள் ஒலிம்பிக் வீரர் புரூஸ் ஜென்னர்

Bruce Jenner arriving at the Los Angeles International Airport***NO DAILY MAIL SALES***

அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரர் மற்றும் தற்பொழுது பேச்சாளர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொழிலதிபராக இருப்பவர் வில்லியம் புரூஸ் ஜென்னர். தங்க பதக்கம் 65 வயதான இவர் கடந்த 1976ம் ஆண்டு நடந்த கோடை கால ஒலிம்பிக்கில் டெகாத்லான் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர். டெகாத்லான் என்பது 4 ஓட்டங்கள், 3 தடை தாண்டுதல் மற்றும் 3 எறிதல் (வட்டு, ஈட்டி மற்றும் குண்டு போன்றவை) ஆகிய போட்டிகளை கொண்டது. நடிகர் தடகள வீரர் என்ற நிலையில் இருந்து தொலைக்காட்சி தொடரில் அவர் நடிக்க ...

மேலும் சில... »

கதறி அழும் ரோட்வீய்லர் நாய் – உடன் பிறந்த சகோதரனின் பிரிவை தாங்க முடியாமல்

605823-5c2f1aa6-a7e4-11e4-8a24-c30b87d14c14

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரெட் என்பவர் இரட்டைப்பிறவிகளான ’ரோட்வீய்லர்’ இன நாய்களை விலைக்கு வாங்கி செல்லமாக வளர்த்து வந்தார். கடந்த 20-ம் தேதி அந்த நாய்களில் ஒன்றான ஹேங்க்-கின் உயிர் பிரிந்தது. தனது உடன் பிறந்த சகோதரனின் பிரிவை தாங்க முடியாமல் அதன் பிணத்தின் மீது படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறியழுது. மேலும், அந்த நாயை கொண்டு சென்று அடக்கம் செய்ய முயன்ற உரிமையாளரின் காலை சுற்றிச்சுற்றி வந்து அவரை தடுத்தது. அதனை கண்டு மனம் நெகிழ்ந்த உரிமையாளர் இறந்த ...

மேலும் சில... »

ஒரு மில்லியன் அரிய ஆவணங்கள் சேதம் – ரஷ்ய நூலகத்தில் பெரும் தீ விபத்து

Part-PAR-Par8088133-1-1-0

ரஷ்யாவின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் சேதமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் சமூக விஞ்ஞானங்களுக்கான அறிவியல் தகவல் நிறுவனத்திற்கு (ஐஎன்ஐஓஎன்) சொந்தமான இந்நூலகம் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 21500 சதுர அடி அளவிற்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த நூலகத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆவணங்கள் உட்பட 10 மில்லியன் ஆவணங்கள் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த நூலகத்தின் இரண்டாவது மாடியில் திடீர் தீ ...

மேலும் சில... »

பிரான்ஸ் ஏர் ஏசியா விபத்து தொடர்பில் குற்றவியல் விசாரணை

airasia_759

ஜாவா கடலில் விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானம் தொடர்பில் அதிகாரபூர்வ குற்றவியல் விசாரணையை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் விழுந்து விபத்துக்குள்ளாகிய எயார் ஏசியா விமானத்தை இயக்கியது பிரான்ஸை சேர்ந்த துணை விமானி என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்தே குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 162 பேருடன் எயார் ஏசியா விமானம் விழுந்து விபத்துக்கள்ளாகியதற்கு மனிதத் தவறு காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் நீதிபதி விசாரணை மேற்கொள்ளவுள்ளாரென பிரான்ஸ் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடலில் விழுவதற்கு முன்னதாக குறித்த விமானம் கொந்தளிக்கும் கார்மேகங்கள் நிறைந்த ...

மேலும் சில... »

மசூதி குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் – பாகிஸ்தானில்

HY17MASJID4_1085547g

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஷிகார்பூரில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான மசூதியில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி மேலும் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு, தலீபான் தீவிரவாத அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஜன்துல்லா என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. ...

மேலும் சில... »

ஜெனீவா மாநாட்டில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான பிரேரணை

6a00d8345194a469e201676828dd9e970b

ஸ்ரீலங்காவுக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனீவா மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த வருடத்திற்கான அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் ஸ்ரீலங்காவுக்கு எதிராக கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்தப் பிரேரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த புதிய பிரேரணை முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி ...

மேலும் சில... »

பெட்ரோல் விலை பாகிஸ்தானில் லிட்டருக்கு ரூ.8 குறைவு

1-31-2012_33382_l

இஸ்லாமாபாத், அண்டை நாடான பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைந்துள்ளது. மேலும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.9.56யும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 10.48 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவை இன்று முதல் அமலுக்கு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில... »

வீடியோவை வெளியிட்டது ஐ.எஸ் – ஜப்பானின் இரண்டாவது பிணைக்கைதியும் கொல்லப்பட்டார்

23-bloodpressure11-600

ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த ஜப்பானியர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவர் தவிர ஜப்பானின் கென்ஜி கோடோ என்பவரையும், ஜோர்டானை சேர்ந்த விமானி அல்–கஸாக்பே என்பவரையும் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இவர்களை உயிருடன் விடுவிக்க வேண்டுமானால் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதி ஆக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என ஐ.எஸ்.தீவிரவாதிகள் கெடுவிதித்து இருந்தனர். இதை தொடர்ந்து ஐப்பான் மற்றும் ஜோர்டான் அரசுகள் ரிஷாவி விடுதலைக்கான ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus