Home » World News (page 20)

World News

குடியிருப்புப் பகுதியில் தாக்குதல்: உக்ரைனில் 15 பேர் பலி

12

உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மரியுபோலின் குடியிருப்புப் பகுதியில் அமைந்த சந்தையில் நிகழ்ந்த ராக்கெட் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் மரியுபோல் நகரைக் கைப்பற்ற ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சண்டையிட்டு வருகின்றனர். ரஷியா ஏற்கெனவே இணைத்துக் கொண்ட கிரீமியாவுடன் நில வழித் தொடர்பை ஏற்படுத்தும் இடமாகவும் மரியுபோல் உள்ளது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் சண்டையில் உக்ரைன் பெரும் இழப்புகளைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு நடத்த உக்ரைன் ...

மேலும் சில... »

தாக்குதலுக்குப் பிந்தைய “சார்லி ஹெப்டோ’: 70 லட்சம் பிரதிகள் வெளியீடு

11

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த மாதம் 7-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான “சார்லி ஹெப்டோ’ வார இதழின் 70 லட்சமாவது பிரதி சனிக்கிழமை அச்சிடப்பட்டது. இந்த இதழின் அட்டையில் முகமது நபியின் உருவத்துடன் கூடிய கேலிச் சித்திரம் மீண்டும் வெளியிடப்பட்டிருப்பதால் முஸ்லிம் சமூகத்தினரின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ள நிலையிலும், பிரான்ஸில் விற்பனை செய்வதற்காக மட்டும் 63 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இது தவிர மேலும் 7 லட்சம் பிரதிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தாக்குதலில் “சார்லி ஹெப்டோ’ அலுவலகத்திலிருந்த ஆசிரியர் குழுவினர், ஊழியர்கள் உள்பட 11 ...

மேலும் சில... »

வாடிகன் மீது தாக்குதல் அபாயம்: போப் பிரான்சிஸ்

14

கத்தோலிகர்களின் தலைமையகமான வாடிகனில், பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவதற்கான அபாயம் இருப்பதாகக் போப்பாண்டவர் பிரான்சிஸ் வியாழக்கிழமை கூறினார். வாடிகனில் பாதுகாப்புப் பணியை கவனித்து வரும் இத்தாலிய போலீஸாரிடையே வியாழக்கிழமை ஆற்றிய புத்தாண்டு உரையில் அவர் கூறியதாவது: மனித குலத்தை கவலையடையச் செய்துள்ள பயங்கரவாதத்தின் நிழலும், அதன் அபாயமும் நம் மீது படிந்துள்ளன. எனினும், கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் இந்த அபாயத்தைக் கண்டு மனம் உடையவோ, விரக்தியடைவோ கூடாது என்றார் போப்பாண்டவர். ஐ.எஸ். அமைப்புக்கு எதிராகவும், அவர்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நிகழ்த்திவரும் ...

மேலும் சில... »

ஏராளமான உடல்களுடன் ஏர் ஏசியா விமானத்தின் எஞ்சிய பாகம் மீட்பு

13

கடந்த டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விமானப் பயணிகளின் உடல்களும், விமானத்தின் முக்கியப் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று விமானத்தின் எஞ்சிய பாகமும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட விமானப் பாகத்தில் சில விமானப் பயணிகளின் உடல்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில... »

சோலார் டைனமிக்ஸ் செயற்கைக்கோள் எடுத்த சூரியனின் 10 கோடியாவது புகைப்படத்தை நாசா வெளியிட்டது

12

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த சூரியனின் 10 கோடியாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நாசா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சூரியனை கண்காணித்து வரும் சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைக்கோள், அதிநவீன படத் தொகுப்பு (ஏஐஏ) கருவியின் உதவியுடன் கடந்த 19-ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனின் முழு பகுதியையும் 12 விநாடிகளுக்கு ஒரு முறை 8 கோணங்களில் சுழன்றுகொண்டே புகைப்படம் எடுக்கும் வகையில் 4 தொலைநோக்கிகளை ஏஐஏ பயன்படுத்துகிறது. டைனமிக் செயற்கைக்கோளில் உள்ள ...

மேலும் சில... »

இராக்கில் ஐ.எஸ். தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலி

11

இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். இராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள முக்தாதியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலியானதாக அல்- கேதார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் அலி அல்-அன்சாரி என்பவரும் மற்றுமொருவரும் பலியானதாகவும், அஹமீத் மற்றும் குஸே ஷஹீப் என்ற இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில... »

இந்தியா புறப்பட்டார் ஒபாமா

15

மூன்று நாள் பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று மாலை வாஷிங்டன் நகரில் இருந்து தனி விமானத்தில் இந்தியா புறப்பட்டார். நாளை காலை 10 மணிக்கு தில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கும் ஒபாமா, குடியரசுத்தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

மேலும் சில... »

நாசா வெளியிட்ட சூரியனின் 10 கோடியாவது புகைப்படம்!

sun_002

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த சூரியனின் 10 கோடியாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா, சூரியனின் 10 கோடியாவது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைகோள் எடுத்துள்ளது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சூரியனை சோலார் டைனமிக்ஸ் என்ற கண்காணிப்பு செயற்கைக்கோள் கண்காணித்து வருகிறது. இது அதிநவீன படத் தொகுப்பு (ஏஐஏ) கருவியின் உதவியுடன் கடந்த 19ம் திகதி சூரியனின் 10 கோடியாவது புகைப்படத்தை எடுத்துள்ளது. சூரியனின் முழு ...

மேலும் சில... »

ஒபாமா செல்போனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்!

download (3)

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக கருதப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தும் போனில் பாஸ்வேர்டை தாண்டி அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளன. அமெச்சூர், புரொபசனல் ஹேக்கர்கள், உளவு ஏஜென்சிகள் ஆகியவை அதிபர் ஒபாமா எங்கு செல்கிறார்? எப்போது செல்கிறார்? அவர் என்ன பேசுகிறார்? யார் யாரிடம் பேசுகிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாத பல வசதிகள் இந்த போனில் உள்ளன. சுமார் 10 ஆண்டுகளாக பிளாக்பெர்ரி மொபைலை மட்டுமே ஒபாமா பயன்படுத்தி வந்தார். ஆனால் 2008–ல் அமெரிக்க அதிபரான பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக பிளாக்பெர்ரியை ...

மேலும் சில... »

உச்சகட்ட உள்நாட்டு குழப்பம்! ஏமனில் தொடரும் அரசியல் வெற்றிடம்…

24-1422096453-yemen-president-mansour-hadi345-600

ஏமன் அதிபரான மன்சூர் ஹதி ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில் அந்நாட்டில் அரசியல் வெற்றிடம் நீடிப்பதால் குழப்பம் தொடருகிறது. ஏமன் நாட்டில் அதிபராக இருந்த மன்சூர் ஹதி, அமெரிக்கா ஆதரவாளர். அல்கொய்தா இயக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தவர். அதிபர் ஹதிக்கு எதிராக ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் பல பகுதிகளைக் கைப்பற்றினர். பின்னர் தலைநகர் சானா, அதிபர் மாளிகையையும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் கைப்பற்றினர். இதனால் வேறுவழியின்றி அதிபரான ஹதி பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். ஆனால் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus