Home » World News (page 30)

World News

அதிகாரிகள் நால்வர் பணி நீக்கம் – ஷாங்காய் புத்தாண்டு ஜன நெரிசல்

stamp5

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36பேர் இறந்துப்போன சம்பவம் தொடர்பில், மாவட்ட அதிகாரிகள் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஷாங்காய் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் மாநகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த எவரும் இதற்கு பொறுப்பு என்று குற்றங்காணப்படவில்லை. இந்த விழாவிற்கான ஆயத்தப் பணிகளை அதிகாரிகள் சரிவர செய்யாததே, பண்ட் என்றழைக்கப்படும் புகழ்மிக்க ஆற்றோரத் திடலில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் கூட்ட நெரிசலுக்கும் காரணம் என்று இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ...

மேலும் சில... »

கிரேஸி பொங்கல் கொண்டாட்டம் – 23ம் தேதி துபாயில்

21-1421830668-kalyanamalais1

துபாயில் வரும் 23ம் தேதி கிரேஸி பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுகிறது. தோஹா வங்கி வழங்கும் கிரேஸி பொங்கல் கொண்டாட்டம், சன் டிவியின் கல்யாண மாலை மெகா ஷூட்டிங் வரும் 23ம் தேதி துபாயில் உள்ள அல் நஸ்ர் லீஷர் லேண்டில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் நடிகரும், திரைக்தை ஆசிரியருமான கிரேஸி மோகன் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைக்க உள்ளார். மேலும் புலவர் ராமலிங்கம், பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு 32 இன்ச் ...

மேலும் சில... »

பிரேசில் சிறையில் வன்முறையின் காரணமாக போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் சாவு!

mbrazil

பிரேசில் நாட்டில் சிறையில் அதிக அளவில் கைதிகள் அடைத்து வைக்கப்படுவதால் இடப்பற்றாக்குறை காரணமாக அடிக்கடி வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அங்குள்ள சிறைகளில் 5 லட்சத்து 63 ஆயிரம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்த நிலையில், பிரேசிலில்தான் அதிகம்பேர் சிறைக்கைதிகளாக உள்ளனர். இந்த நிலையில் பிரேசிலில் உள்ள ரெசிபி சிறையில் நேற்றுமுன்தினம் பயங்கர வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் சிறைக்காவலர்களும், போலீசாரும் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்தது. துப்பாக்கிச் சூடும், குண்டுவெடிப்புகளும் நடந்தன. இதில் ஒரு ...

மேலும் சில... »

14வது மாடியிலிருந்து குதித்து இந்திய பணிப் பெண் தற்கொலை! சிங்கப்பூரில் பயங்கரம்….

funeral-workers

சிங்கப்பூரில் வீட்டு வேலை பார்த்து வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல்வீந்தர் கெளர் என்ற பணிப் பெண், வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட மோதலில் 14வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். சிங்கப்பூரின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள பெடாக் ரிசர்வாயர் வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்தவர் பல்வீந்தர் கெளர். இவர் தான் வேலை பார்த்து வந்த வீட்டில் 2 முறை திருடியதாக புகார் கூறப்பட்டு வேலையை விட்டு நீக்கப்பட்டார். அவரை நாடு கடத்தவும் ...

மேலும் சில... »

மாம்பழங்கள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய

39

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இருநூறு கப்பல்களில் வந்த மாம்பழங்களில் பழத்தை மொய்க்கும் ஈக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்தத் தடை கடந்த ஆண்டு மே மாதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தமது ஆணையத்தின் உணவு மற்றும் கால்நடைத்துறை அலுவலகம் இந்தியாவில் நடத்திய சில ஆய்வுகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. இந்திய மாம்பழங்களுக்கான மிகப்பெரியச் சந்தையாக ஐரோப்பா இல்லாவிட்டாலும், இந்தத் தடையானது, உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை பாதித்தது. ...

மேலும் சில... »

தணிக்கைக் குழுவில் பாஜகவினர் திணிப்பு

38

இந்தியத் தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த லீலா சாம்ஸனும் வாரியத்தின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்த பிறகு திரைப்படத் தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹ்லானி தலைமையில் புதிய குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வாரியத்தில் பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களுமே இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. குழுவின் தலைவரான நிஹ்லானி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோதிக்கான பிரச்சாரப் பாடலை உருவாக்கியவர். அதேபோல குழுவின் உறுப்பினாரக இருக்கும் நடிகை ஜீவிதா, தற்போது தெலுங்கானாவில் பா.ஜ.கவின் ...

மேலும் சில... »

ஏர் ஏஷியா விமானம் விபத்து

37

கடந்த மாதம் நொறுங்கி விழுந்த ஏர் ஏஷியா விமானம் அந்தப் பயணத்தின் கடைசி நிமிடங்களில் அசாதாரணமான வேகத்தில், தனது பறக்கும் உயரத்தை அதிகரித்தது என்பதை இந்தோனீஷிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அந்த விமானத்தின் ராடார் தரவுக் குறிப்புகளை பார்க்கும்போது, விமானம் திடீரென மேலே உயர்ந்தது, ஸ்திரமாகி பின்னர் காணாமல் போனது தெரியவந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் இக்னேசியஸ் ஜோஜன் தெரிவித்துள்ளார். அந்த விமான விபத்து ஏன் ஏற்பட்டது என்பது குறித்து, விமானப் பயணக் குறிப்புகளை பதிவு செய்யும் இரண்டு ஒலிப்பதிவு கருவிகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து ...

மேலும் சில... »

லெனின் நினைவிடத்தில் கலாட்டா

36

ரஷ்யப் புரட்சியை தலைமை தாங்கி நடத்திய லெனின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மாஸ்கோ நினைவிடத்தில் புனித நீரை ஊற்றி, “எழுந்து இந்த இடத்தைவிட்டு போ” என்று கூக்குரலிட்ட இரண்டு ரஷ்யக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில்லறை ரௌடித்தனம் செய்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருக்கின்றன. திங்கட்கிழமையன்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. ஒலெக் பேசொவ் மற்றும் யெவ்கெனி அவிலொவ் ஆகிய இந்த இரு கலைஞர்களின் ஆதரவாளர்கள் தங்களது நோக்கம் ” லெனின் எப்போதும் உயிருடன் இருக்கிறார் ” என்ற புனைவை எதிர்க்கவேண்டும் ...

மேலும் சில... »

அதிபர் ஒபாமா – ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

barack-obama-300

அமெரிக்காவில் நாட்டு நிலைமை தொடர்பில் அதிபர் ஒபாமா ஆற்றியுள்ள வருடாந்த உரையில், நிதி நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக பிரகடனம் செய்தார். அரசின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயன்படும் விதத்தில் உருவாக்கப்பெடுமென அவர் உறுதியளித்தார். சில நிறுவனங்களும் சில நபர்களும் மிகக் குறைவாகவே வரி செலுத்தவும் அல்லது அறவே வரி செலுத்தாமலும் இருக்க இடம் தரும் வரிச் சட்ட ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சுகாதார சேவைகள், நிதி நிர்வாகம், குடிவரவு ஆகிய விஷயங்களில் தனது நிர்வாகம் ஏற்படுத்திய சாதானைகளை ...

மேலும் சில... »

அமெரிக்காவில் தொழில் அதிபர் ஆன 13 வயது இந்திய மாணவன்!

young_businessman_003

இந்திய வம்சாவளியை சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவன் இளம் வயதில் தொழில் அதிபராகி உள்ளான். அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் சுபம் பானர்ஜி 8ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் வைப்பதற்காக கண் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி பிரிண்டரை உருவாக்கினான். தற்போதுள்ள பிரெய்லி பிரிண்டர் 9 கிலோவுக்கு மேல் எடை உள்ளது. ஆனால் சுபம் பானர்ஜி தயாரித்துள்ள பிரிண்டர் மிக குறைந்த எடை கொண்டது. மேலும் விலையோ மிகவும் குறைவு அதாவது ரூ.15 ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus