ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றைய பிரிவில், ஆண்டி முர்ரேவை வீழ்த்தி, நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரேவுடன் கடுமையாக மோதினார்.
இப்போட்டியில், ஜோகோவிச் 7-6, 6-7, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் முர்ரேவை வீழ்த்தி, ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 5-வது முறையாக கைப்பற்றினார்.
ஜோகோவிச்சுக்கு முதல் செட்டில் கடும் நெருக்கடி தந்த முர்ரே இரண்டாவது செட்டை அசத்தலாக கைப்பற்றினார். எனினும், அடுத்தடுத்த செட்களில் ஜோகோவிச்சின் சாதுர்யமான ஆட்டமே ஆதிக்கம் செலுத்தியது.
முன்னதாக, மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை அவர் 6-3 7-6(5) என்ற நேர் செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.