Home » Asia News » சென்னை நோக்கியா கைப்பேசி தயாரிக்கும் ஆலை மூடப்பட்டது!

சென்னை நோக்கியா கைப்பேசி தயாரிக்கும் ஆலை மூடப்பட்டது!

சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா மொபைல் நிறுவனம் கைப்பேசி தயாரிக்கும் ஆலை இன்று முதல் மூடப்பட்டது.

இதனால் வேலையிழந்துள்ள சுமார் 900 தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நோக்கியா நிர்வாகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தொழிலாளர்களுக்கு, நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்திற்கு ஏற்ப ஏழரை லட்சத்தில் இருந்து 9 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் எனத் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பை தொடங்கியது.

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு என்கிற பெயரில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus