Home » Sports News » சென்னை மராத்தான் பந்தயம் 7–ந் தேதி நடக்கிறது

சென்னை மராத்தான் பந்தயம் 7–ந் தேதி நடக்கிறது

சென்னை,

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் விப்ரோ ஆதரவுடன் 3–வது சென்னை மராத்தான் பந்தயம் வருகிற 7–ந் தேதி சென்னையில் நடக்கிறது. முழு மராத்தான் (42.2 கிலோ மீட்டர்), அரை மராத்தான் (21.1 கிலோ மீட்டர்), 10 கிலோ மீட்டர் தூர பந்தயம் என 3 பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 12 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.3.35 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. முழு மராத்தான் பந்தயம் அதிகாலை 4 மணிக்கும், அரை மராத்தான் பந்தயம் அதிகாலை 5.15 மணிக்கும் ஆரம்பமாகிறது. 10 கிலோ மீட்டர் தூர பந்தயம் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அடையாறு கஸ்தூரிபாய் நகர் மற்றும் நேப்பியர் பாலம் ஆகிய இடங்களில் இருந்து பந்தயம் ஆரம்பமாகிறது. இந்த தகவலை போட்டி இயக்குனர் செந்தில்குமார் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus