மாட்டுப் பொங்கல் நாம் எதற்காக கொண்டாடுகின்றோம். நம் தமிழ் இனமும் இந்துக்களும் மாடுகளை தெய்வமாகவும் தெய்வத்திற்கு அடுத்ததாகவும் எண்ணுகின்றார்கள்.இவ்வுலகில் ஒரு குழந்தை பிறந்து தாய்பாலை குடிக்கின்றதா? இல்லையா? மாட்டுப்பால் குடித்தே வளர்கின்றார்கள்.
ஒரு தாய் தரும் உணவைப் போலவே ஒரு மாடு எமக்கு உணவாகவும் பாலாகவும் தன் இரத்தத்தை எமக்கு பாலாகத்தருகின்றது.அது இறந்த பின்பும் அதனுடைய தோலை எமக்கு பல வகையில் உதவும் பொருளாக இருக்கின்றது. இந்தப்பூமியில் மனிதனுக்கும் மனிதனையும் விட மாடுகள் தாயாகவும் தந்தையாகவும் மறைமுகமாகவே மனிதர்களோடு வாழ்ந்து வருகின்றது.
இதை அறிந்த எம் முன்னோர்கள் அதற்கு வருடத்தில் ஒரு முறையாவது நன்றியைக் கூற வேண்டும் என்று எண்ணியே தைமாதத்தில் “2ம்” நாள் மாட்டுப் பொங்கலாக கொண்டாடிவருகின்றார்கள்.
இத்திருநாளை இவ்வுலகில் வாழும் அனைத்து இன மக்களும் எதிர் காலத்தில் கொண்டாட வேண்டிய நாளாக அமைய மாட்டுப் பொங்கலை வாழ்க வளமுடன் என்று கூறி வாழ்த்துகிறோம். இதுவே மாட்டுப் பொங்கலின் சிறப்பாகும்.