Home » News » ஹாக்கி இந்தியா லீக் – டெல்லி அணியின் கேப்டன் சர்தார் சிங் சஸ்பெண்ட்

ஹாக்கி இந்தியா லீக் – டெல்லி அணியின் கேப்டன் சர்தார் சிங் சஸ்பெண்ட்

article-2501231-195A754A00000578-925_306x469

ஹாக்கி இந்தியா லீக் போட்டியின்போது, எதிரணி வீரரிடம் கடுமையாக நடந்துகொண்டதற்காக டெல்லி அணியின் கேப்டன் சர்தார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் பஞ்சாப் வாரியர்ஸ் அணியுடன் டெல்லி வேவ்ரைடர்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் எதிரணி வீரர் ஒருவரிடம் சர்தார் சிங் கடுமையாக நடந்துகொண்டார். இதுகுறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று விசாரணை நடத்தியது.

வீடியோ பதிவிலும் சர்தார் சிங் விதிமுறையை மீறியது தெரியவந்தது. இதுகுறித்து சர்தார் சிங்கிடம் கேட்டபோது, அவரும் தனது தவறை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் ஒரு போட்டியில் விளையாடுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

எனவே, நாளை நடைபெற உள்ள தபாங் மும்பை அணியுடனான போட்டியில் சர்தார் சிங் விளையாட மாட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus