தேவையான பொருட்கள் :
கற்பூரவல்லி இலை – 20
தேங்காய்த் துருவல் – 3 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
ப.மிளகாய் – 2
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை :
• மிக்சியில் தேங்காய் துருவல், சீரகம், ப.மிளகாய், கற்பூரவல்லி இலையை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
• அரைத்த விழுதை தயிருடன் சேர்த்து உப்பு கலந்து கொள்ளவும்.
• தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து தயிர் கலவையில் கொட்டவும்.
• இந்த பச்சடி அஜீரண கோளாறுகளுக்கு மிகவும் ஏற்றது. பசியின்மை, வயிற்று மந்தம், ஏப்பம், உணவு செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற நேரங்களில் இதைச் செய்து சாப்பிடலாம்.