சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் பல்வேறுபட்ட மட்டங்களில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும் தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் எனும் தலைப்பில் சமகால அரசியற் பொதுக்கூட்மொன்று பிரான்சில் இடம்பெறுகின்றது.
- சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் ஐ.நா மனித உரிமைச்சபையில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் ?
- ஆட்சி மாற்றத்தின் பின்னால் உள்ள நலன்கள் என்ன ?
- ஐ.நாவின் விசாரணையினை எவ்வாறு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் கையாள்வது ?
இவ்வாறான கேள்விகளை மையமாக இடம்பெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (01-02-2015) பெப்ரவரி 1ம் நாளன்று மாலை 16மணிக்கு 4-6 Place de La Republique, 93100 Montreuil (Metro / ROBESPIERRE, Ligne : 9) எனும் இடத்தில் இப்பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது.
பல்வேறு விடயங்களின் அடிப்படையில் கருத்துப் பரிமாற்றமும் கலந்தாய்வு செய்வதும் அரசியல் விழிப்பினையும் புரிதலையும் ஏற்படுத்தும் என இப்பொதுக்கூட்டத்துக்கான அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழ் அமைப்புக்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் என அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.