Home » Europe News » மோசமாக விளங்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் : ஐரோப்பா

மோசமாக விளங்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் : ஐரோப்பா

6

அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளின் உடலில் மருத்துவ உபகரணங்களையோ அல்லது வேறு பொருட்களையோ வைத்துவிடும் பழக்கம் ஐரோப்பிலேயே சுவிட்சர்லாந்து மருத்துவர்களுக்கு தான் அதிகம் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

OECD என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவிஸ் மருத்துவர்கள் நோயாளிகளின் உடலில் இவ்வாறு விட்டுவிடும் பொருட்களின் எண்ணிக்கை 13 ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 3 மடங்கு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு 1,00,000 அறுவை சிகிச்சைகளிலும் சுவிஸ் மருத்துவர்கள் 11.8 என்ற எண்ணிக்கையில் உபகரணங்களை விட்டுவிடுவதாக தெரியவந்துள்ளது.

சுவிஸ் மருத்துவர்களால் நடக்கும் இந்த மோசமான விபத்துகள் பெல்ஜியம், டென்மார்க், போலாந்து மற்றும் அயர்லாந்துடன் ஒப்பிடுகையில் 20 மடங்கும் அதிகமாக உள்ளது.

இவ்வாறான விபத்துகள் நடக்கும் பட்டியலில், சுவிஸிற்கு அடுத்தபடியாக போர்ச்சுகல் 6.5 என்ற புள்ளியுடனும், பிரான்ஸ் 6.2 என்ற புள்ளியிடனும் உள்ளது.

ஆனால் இந்த அறிக்கையில், சுவிஸ் மருத்துவமனையில் என்ன காரணத்தினால் இந்த விபத்துகள் அதிகளவில் நடந்தது என்பதுபற்றி எதுவும் தெரிவிக்கபடவில்லை.

மேலும், இந்த தகவலை அறிந்த சுவிச் சமூகத்தின் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்ததாகவும், தாங்கள் இந்த புள்ளி விவரங்களை சரிபார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus