Home » London News » துப்பாக்கிச் சூடு, வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் நடந்தது

துப்பாக்கிச் சூடு, வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் நடந்தது

131129221624-12-glasgow-helicopter-horizontal-gallery

வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெல்பாஸ்டின் ஓல்ட்பார்க் வீதியில் உள்ள உணவு விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பங்குகொண்டிருப்பதாக நம்பத் தகுந்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. குறித்த விற்பனை நிலையத்திற்கு அருகில் வந்த சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாக நேற்று மாலை முறைப்பாடு கிடைத்ததாக காவற்துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus