Home » Europe News » பிரான்ஸ் கையாளும் புதிய யுக்தி – அதிகரிக்கும் பொலிசார்கள் தற்கொலை

பிரான்ஸ் கையாளும் புதிய யுக்தி – அதிகரிக்கும் பொலிசார்கள் தற்கொலை

wpid-robbery

பொலிசார்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve, கடந்த சில ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றும் பொலிசார்கள் தற்கொலை செய்துக்கொள்வது வேதனை அளிக்கிறது. இந்த தற்கொலையை தடுக்க காவல்துறையில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளேம்.

இதன் அடிப்படையில் பொலிஸ் பிரிவிற்கு கூடுதலாக 7 உளவியலாளர்களும், பொலிஸ் பயிற்சி பள்ளிகளுக்கு சில உளவியலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். மேலும், பொலிஸ் நிலையங்களில் ஒவ்வொரு பொலிசுக்கும் தனிப்பட்ட லாக்கர்கள் அமைத்து தரப்படும் என்றும், பணியை முடித்துவிட்டு துப்பாக்கிகளை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் அந்தந்த லாக்கர்களில் வைத்துவிட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் கடந்த ஆண்டுகளில் 40, 43 என இருந்த தற்கொலை எண்ணிக்கை 2014ம் ஆண்டில் மட்டும் சுமார் 56 பொலிஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு அவர்களின் குடும்ப பிரச்சனைகளே பெறும்பாலான காரணங்களாக இருந்திருந்தாலும், அவர்களின் வேலைப்பளு, உயர் அதிகாரிகள் மூலம் ஏற்படும் மன உளைச்சல், போதிய பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்டவைகளும் அவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus