Home » Europe News » ஜெர்மனி – கிரீஸின் கடன்களை ரத்து செய்ய முடியாது

ஜெர்மனி – கிரீஸின் கடன்களை ரத்து செய்ய முடியாது

analysts-say-euro-breakup-would-be-beneficial-for-growth-2010-07-11_l

கிரீஸ் வாங்கிய கடன்களை ரத்துசெய்யும் திட்டம் எதுவும் கிடையாது என்று ஜெர்மனியின் ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். கிரீஸில் புதிதாக பதவியேற்றுள்ள இடதுசாரி அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கிரீஸுக்கு புதிதாக பொருளாதார உதவிகளை செய்யும் திட்டமெதுவும் தமக்கில்லை என்றும் ஜெர்மனிய செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அங்கேலா மேர்க்கல் கூறியுள்ளார். வங்கிகளும், கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களும் ஏற்கனவே பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடன்களை ரத்து செய்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கிரீஸின் நிதியமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சனிக்கிழமை மாலை பாரிஸுக்கு செல்கின்றார். கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்ட அவர் முயற்சி செய்வார்.

யூரோ வலயத்தில் கிரீஸ் தொடர்ந்து இருக்க எவ்வளவு செய்ய முடியுமோ அத்தனையும் செய்வோம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரப் பிரிவு ஆணையாளர் பியர்ரி மாஸ்கோவி உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus