Home » Europe News » ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பா – வேலையை இழந்த நபர்

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பா – வேலையை இழந்த நபர்

terrorism

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நபருடன், பழகிய குற்றத்திற்காக ஜேர்மனியை சேர்ந்த ஒருவர் வேலையை இழந்துள்ளார். Frankfurt விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகப்படும் வெளிநாட்டினருடன் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த சந்தேகத்திற்குரிய நபருக்கு அவர் 2000 யூரோக்களை கடனாக கொடுத்து உதவியுள்ளார். விமான நிலையத்தில் பணிபுரியும் இதுபோன்ற ஒருவரின் நடவடிக்கைகள், நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அவரை வேலையிலிருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் அந்த நபர் ஏற்கனவே சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை மறுத்த ஜேர்மனியர், தனது நண்பரின் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் தான் அவருடன் பழகியதும் குற்றமாகாது என்றார். ஆனால் இதனை நிராகரித்த நீதிமன்றம் விமான நிலைய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அவரை பணியிலிருந்து நீக்க உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus