Home » Cinema News » காளிதாசுக்கு விஜய் சேதுபதி அதிர்ச்சி கொடுத்தார்

காளிதாசுக்கு விஜய் சேதுபதி அதிர்ச்சி கொடுத்தார்

Vijay-Sethupathi

பாலாஜி தரணிதரன் இயக்கிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் விஜய் சேதுபதி. இப்படம் கொடுத்த வெற்றி அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

அன்றுமுதல் இன்றுவரை பாலாஜி தரணிதரனும், விஜய் சேதுபதியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். பாலாஜி தரணிதரன் தற்போது மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சேதுபதி திடீரென விசிட் அடித்து படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்தார். மேலும், படத்தின் நாயகன் காளிதாசுடன் இணைந்து செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு பக்க கதை படத்தை வாசன்ஸ் விசுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் மூலம் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கிறார். கோவிந்த் மேனன் இசையமைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus