வங்கதேசத்தில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க் கட்சிகள் காலவரையற்ற வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போராட்டத்தை வங்கதேச தேசிய கட்சி முன்னின்று நடத்தி வருகிறது.
வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலீதா ஜியா தற்போது அலுவலகத்தை வீடாக மாற்றி பயன்படுத்தி வருகிறார்.
வேலைநிறுத்தப் போராட் டத்தை வாபஸ் பெற வேண்டும், இல்லையெனில் கடும் விளைவு களை சந்திக்க நேரிடும் என்று வங்கதேச அரசு கலீதா ஜியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் கலீதா ஜியாவின் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் முதல் இணையம், தொலைபேசி வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஜெனரேட்டர் வசதியுடன் கலீதா ஜியா வீட்டில் மின்சாதனப் பொருள்கள் இயக்கப்படுகின்றன.
அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் வங்கதேச தேசிய கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருகிறது. விரைவில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கலீதா ஜியாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.