பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் நபர் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட் நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார்.
இவர் பிறக்கும்போதே, பெண்களுக்குரிய கர்பப்பை, இனப்பெறுக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்க கூடிய XY குரோமோசோம்களுடன் பிறந்துள்ளார். இவரது, 19 வயதில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால், மனமுடைந்து இவர், விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.
இருப்பினும் நம்பிக்கையை இழக்காத Hayley Haynes, பல தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டார். கடைசியாக பிரித்தானியாவில் உள்ள Royal Derby மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவரது வயிற்றிற்குள் புதிதாக ‘மில்லி மீற்றர்’ அளவுள்ள கர்ப்பபை வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
மில்லி மீற்றர் அளவுள்ள கர்ப்பப்பை மேலும் வளர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, சுமார் 4 வருடங்கள் கர்ப்பபை ஆரோக்கியமாக வளர காத்திருந்தார். அதன் பிறகு IVF என்று அழைக்ககூடிய ‘ஆணின் உயிரணுக்களை பெண்ணின் கர்ப்பப்பையிற்குள் செலுத்தி குழந்தை பெறும் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அவர் சுமார் 10,500 பவுண்டுகளை சைப்ரஸில் நடந்த IVF சிகிச்சைக்கு செலவிட்டார். இந்த சிகிச்சையில் Hayley Haynes குழந்தை பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்பு மட்டுமே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். சில மாதங்களுக்கு பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கர்ப்பபையிற்குள் இரண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதாக தெரிவித்தனர்.
இந்த செய்தியை கேட்டதும் தான் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றதாகவும், ஒரு முழு தாய்மையை உணர்வதாகவும், மேலும், தனது 9 வருட மன உளைச்சலிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது 28 வயதாகும் Hayley Haynes இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களுக்கு Avery மற்றும் Darcey என பெயர்கள் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.