விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வௌிநாடு சென்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எதுஎவ்வாறு இருப்பினும் சட்டத்தரணியாக முழுநேரம் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலக உத்தேசித்துள்ளதாகவும் அத தெரண இன்று முற்பகல் வினவியபோது பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காகவே பைசர் முஸ்தபா சிங்கப்பூர் சென்றுள்ளதாக அவரது பிரத்தியேக செயலாளர் அத தெரணவிடம் கூறியுள்ளார்.