Home » American News » போலீசாரால் சுட்டுக்கொலை! பூங்காவிற்கு விளையாட சென்ற 12 வயது சிறுவன்

போலீசாரால் சுட்டுக்கொலை! பூங்காவிற்கு விளையாட சென்ற 12 வயது சிறுவன்

அமெரிக்காவிலன் கிளீவ்லாந்தில் 12 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், அங்கு கீழே இருந்த போலி துப்பாக்கி ஆயுதத்தை எடுத்து விளையாடி வந்துள்ளான். அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரி அந்த போலி துப்பாக்கியை தரும்படி சிறுவனிடம் கேட்டுள்ளார். அவன் தர மறுத்ததையடுத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுள்ளதாவது, போலீசார் துப்பாக்கியை அவனிடம் தரும்படி கேட்டுள்ளனர். பின்னர் கையை மேலே தூக்கி நிற்க சொல்லியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு சிறுவன் மறுத்ததால், தவறுதலாக போலீஸ் அதிகாரி அவனை சுட நேரிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய அந்த சிறுவனின் குடும்ப வழக்கறிஞர்: சனிக்கிழமையன்று பூங்காவிற்கு தனது நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவன், அங்கு நடப்பது என்னவென்று அறியாமல் துப்பாக்கியை எடுத்து விளையாடியதாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus